முட்டையின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கும் - புரளியைக் கிளப்பும் ரணில்
- எஸ். சதீஸ் -
எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக யானை சின்னத்திலும், சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பவிட்டால் முட்டையின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமென ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொட்டக்கலை சி.எல்.எப்பில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டு மக்கள், ஜனாதிபதித் தேர்தலில், அனுரகுமார திசாநாயக்கவை தெரிவு செய்தனர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தை கலைத்தார். எதற்காக பாராளுமன்றத்தை கலைத்தார். அவருடைய வேலைத்திட்டம் என்னவென்று கூற வேண்டும். என்னிடம் 16 குடைகள் இருந்தன. அதனை கூட எனது பாதுகாவலர்கள் தான் பிடிக்கின்றனர்.
பாராளுமன்றத்தை சுத்தசெய்வதற்கு வாக்களிக்குமாறு கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளர்களின் பெயர்கள் கூட தெரியாது.
எமது கட்சியிலும், புதிய ஜனநாயக முன்னணியிலும் மக்களுக்கு தெரிந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அனைத்து கட்சிகளிலும் தெரியாத வேட்பாளர்களே உள்ளனர். பாராளுமன்றத்தில் உள்ள திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, பிரேரணையை நாங்கள் கொண்டு வந்த போது, தேசிய மக்கள் சக்தியினர் எதிராக வாக்களித்தனர். அந்த நேரம் திருடர்களை பிடிக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. தற்போது திருடர்களை பிடிப்பதாக சத்தமிடுகின்றனர் என்றார்.
Post a Comment