Header Ads



வட்சப் OTP, சூம் code பற்றி அறுவுறுத்தல்


இலங்கையில்  (WhatsApp) கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும, வட்சப் பயனர்களின் கணக்குகள் ஊடுருவல் செய்யப்படும் அபாயம் நாட்டில் அதிகளவில் உள்ளதால், மூன்றாம் தரப்பினருடன் எந்த ஒரு கடவுச்சொல்லையும் (OTP) பகிர வேண்டாம் கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.


இதுவரையில் மூன்று வட்சப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.


மேலும், Zoom ஊடாக கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதற்கான codeகள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்களின் வட்சப் கணக்குகள் ஊடுருவல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.