Header Ads



பொய் வாக்குறுதிகளை கூறிய NPP க்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்காதீர்கள் - சஜித்


நிர்க்கதிகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதியளித்தபடி மக்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது. என்றாலும் இந்த மாற்றங்களை செய்ய முடியாத ஜே.வி.பிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்காதீர்கள். ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும். இது தான் நாட்டிற்கு பொருத்தமான தெரிவாக இருக்கும். ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அநுர குமார திஸாநாயக்க கூறியது போல் அதிகாரத்திற்கு வந்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அவரால் குறைக்க முடியாதுபோயுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்படிக்கையை மாற்றியமைப்பேன் என்று தெரிவித்தார். என்ற போதிலும், அவரால் இன்று மாற்றியமைக்க முடியவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு கொழும்பு கொலன்னாவ கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (27) கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய்களுக்கு வரிசையும் காணப்படுகின்றன. 2028 ஆம் ஆண்டு முதல் கடனை அடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி நாட்டையே சிக்கலில் தள்ளியுள்ளார். இதற்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே உள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


தற்போதைய பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இந்த கடனை செலுத்த முடியாது. இதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த, பெரும்பான்மையான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு ஏற்ற இணக்கப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியால் கையெழுத்திடலாம். வரிசை யுகத்திற்கு பதிலாக அபிவிருத்தி யுகத்தை உருவாக்கும் நாட்டை ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.