Header Ads



இலங்கை சீனா அல்ல - NPP க்கு சுட்டிக்காட்டும் எரான்


ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியை போல அடுத்துவரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் பெறுவோம் என நினைப்பது தவறான நிலைப்பாடாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சாடியுள்ளார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தள்ளார்.


கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறி விட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் யாரை நாடாளுமன்றத்தை அனுப்புவது என்பதை தலைமை பீடம் தெரிவு செய்வதற்கு இது சீனா அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தல் , மாகாணசபைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு பெரும்பாலானோர் மத்தியில் காணப்படுகிறது.


இது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும். நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்கும் எனவும் எரான் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறான அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் கூட்டணியால் உருவாக்க முடியும் என்று நம்புகின்றோம்.


ஜனநாயக நாடுகளில் ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்தும், பிரதமர் பிரிதொரு கட்சியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவது புதிய விடயமல்ல என்றும்  எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.