ரஞ்சன் தொடர்பில் NPP யின் நிலைப்பாடு
ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல உண்மையை பேசியதால் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
திருட்டு, மோசடிகளுக்கு எதிராக தனித்து போராடியவர் ரஞ்சன் ராமநாயக்க எனவும், பொதுத் தேர்தலின் பின்னர் அநீதிக்கு ஆளானவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமரியாதை செய்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், அவருக்கு பூரணமாக மன்னிப்பு வழங்கப்படவில்லை. இதனால் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமக்கு முழுமையான அளவில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment