Header Ads



இஸ்லாம் கூறும் எளிய வழிமுறை அநுரகுமாரவிடமும், NPP யிடமும் இருந்ததை நேரில் கண்டடேன் - Dr ரிஸ்வி சாலிஹ்


கொழும்பு மாவட்ட தேசிய சக்தி வேட்பாளர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ்….யுடன் பேட்டி 


கே. உங்கள் தொழில் பாடசாலை, மற்றும்  அனுபவங்கள்.

ப. எனது பெயர் ரிஸ்வி சாலிஹ். கொழும்பு இசிப்பத்தான கல்லூரியில் கல்வி கற்றேன். எனது மொழி சிங்கள மொழி, ஆங்கில மொழி தமிழ் மொழி பேச்சு மொழிகளாகும். எனக்கு இரண்டு பிள்ளைகள் . ஒர் மகள் இலன்டனில் விசேட வைத்திய நிபுணர் அங்கு கடமையாற்றுகிறார். மகன் பொறியியலாளராக கம்பெனியில் ஒன்றில் கொழும்பில் கடமையாற்றுகிறார்.  எனது மனைவி ஓர்  ஆங்கில ஆசிரியராக கடமையாற்றுகிறார். எனது மனைவி மறைந்த டாக்டர் எம்.சி கலீல் அவர்களின் பேத்தியும் ஆவார். நாங்கள் கொழும்பு 7 ல் வாழ்கின்றேன்.


நான் வைத்தியராக கற்று முதன் முதலில் அரச வைத்திய அதிகாரியாக நுவரேலியா வைத்தியசாலைக்கு முதன் முதல்  கடமையாற்றினேன்.  அங்கு 4 வருடங்களாக மலைய மக்களது நோயைக் குணப்படுத்துவதற்காக   காலை 7 மணி தொடங்கி நடு இரவு 2 மணி வரை அந்த மக்களோடு இருந்து சேவையாற்றினேன்  ; அந்த மருத்துவம், மனிதபிமான சேவை எனக்கு இன்றும் இரத்தத்தோடு  ஆழப்பதிந்து. பினி  எனும் வரும்  மனிதனுக்கு பணம்,நேரம், அந்தஸ்து எனப் பார்க்காமல் தனது வைத்திய சேவையை வெற்றிகரமாக செய்து வருகின்றேன்;.


எனது சேவையில் ; மருத்துவ அதிகாரியாக  அல்பிட்டிய இந்துரவ எனும் ஊரில் ஓர் வருடம் கடமையாற்றினேன். அதன் பின்னர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் பின்லாந்து அரசாங்கம் செயல்படுத்திய விபத்துச் சேவை பிரிவில் இணைந்து  கடமையாற்றினேன்.  


நான்  கடந்த 27 வருடகாலமாக இன்று வரை  மருதானை சந்தியில் உள்ள டாக்டர் எம்.சி கலீல் தனியார் வைத்தியசாலையை பாரமெடுத்தல்  இன்றும் அங்கு கடமையாற்றி வருகின்றார்.  நீங்கள் என்னை பத்திரிகை நேர்முகம் செய்ய வரும்போது மருத்துவம் செய்து கொண்டு தான்  உள்ளேன்.

  

ஆக மொத்தம் 37 வருடங்கள் வைத்தியத்துறையில் சேவையாற்றி வருகின்றேன்.  இப்பிரதேச  வாழ் மக்களுக்கு என்னால் முடிந்தளவு சேவையாற்றி வருகின்றேன். 


மருதானை கலீல் வைத்தியசாலை என்றால் குழந்தைப் பிரசவத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.  என்னிடம் தாய் அவரது  மகள் மகள் மகளின்; மகள் என மூன்று முறை பிரசவ வைத்தியம் பார்த்த தாய்மார்களும் இப்பிரதேசத்தில் உள்ளனர்


இப்பிரதேசத்தில் உள்ள மருதானை, மாளிகாவத்தை, தெமட்டகொட,குணசிங்கபுர என பல பிரதேச வாழ் மக்கள் மத்திய தர வருமானம் கொண்ட  சாதாரண மக்களும் இவ் மக்கள்  ; தனியார் வைத்தியசாலைக்கு செல்வதற்கு போதிய பண வசதிகள் இல்லாத ஏழை மக்கள்.   அவர்களுக்கு குழந்தைகளுக்கு தாய் தகப்பனுக்கு   நோய் ஏற்படும் போது என்னைத் தேடி இங்குதான் ஓடி வருவார்கள். வேறு ஒர் டாக்டர் இருந்தாலும் நான் கடமையில் இல்லையென்றால் மீள வீடு சென்று விடுவார்கள்.


அவர்களிடம் நான் பணம் எதிர்பார்த்து மருத்துவம் செய்வதில்லை… பாவம் அவர்கள் கஷ்டமான சூழ்நிலையில் இந்தக் கொழும்பில் வாழ்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கு  மருந்து எடுப்பார்கள்…. அவர்களது வாழ்க்கைத்தரம், கல்வி, வருமானம், வீட்டு வசதிகள் ,தொழிலற்ற நோயானவர்கள் மற்றும்  ஏழை மக்கள் எவ்வாறு மக்களுக்கு அரசியல் அதிகாரம் ஊடாக ஏதாவது செய்ய வேண்டும். நாம் உண்டோம், குடித்தோம், வாழ்ந்தோம். நாம் நமது நாட்டுக்கு நமது சுற்றத்தாருக்கும்  நம் சமூகத்தாருக்கும்  என்ன செய்தோம்…?…. கடந்த கால அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பங்கள் அவர்களது உறவினர்கள்  அபிவிருத்தியடைந்தார்களே தவிர… நமக்கு வாக்களித்த மக்கள் எவ்வித பிரயோசனமும் முன்னேற்றம் அடையவில்லை……அந்த மக்கள் இன்றும் அதே மூலை முடுக்கு  சேரி வீடுகளிலும் ஒரு வீட்டில் பல குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது பிள்ளைகளுக்கு ஒர் பாடசாலையைத் சேர்த்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள் ; …பிள்ளைகள் படித்தாலும் வறுமை காரமாண  இடை நடுவில் கல்வியை நிறுத்தி நாளாந்த  சம்பளத்திற்கு கடைகளிலும் கூலித் தொழில்களுக்கும்; செல்கின்றார்கள்;.

  

ஓர் நாட்டின் இதயம் தலைநகரம் இந்த கொழும்பு இங்கு வாழ் மக்கள் கல்வியில் ,தொழில் வர்த்தகம் சுகாதாரம் இருப்பிடங்களை வளமாக அபிவிருத்தி கானல் வேண்டும் இங்கு வாழும் மக்கள் அரச தொழில் வர்த்தகம் சிறந்த கல்வி வசதிகளை பெற வேண்டும்.  அதற்காகவே நான் ஊழல் அற்ற சிறந்ததொரு ஒழுக்கமுள்ள இந்தக் கட்சியை தேர்ந்தெடுத்து இம்முறை தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்ய ஆசைப்படுகிறேன்

.

கே. உங்களுக்கு ஏன் தேசிய சக்தி கட்சியில் ஆர்வம்  ஏற்பட்டது. அதில் எப்போது இணைந்தீர்கள்…

ப. நான் 10 வருடங்களுக்கு முன்புதான் பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி கட்சி அலுவலகத்திற்கு சென்றேன்.. எனது நண்பர் ஒருவர் சட்டத்தரணி அவரது 4 பிள்ளைகளின் பிரசவத்தையே நான் மருத்துவம் செய்தேன். ஆதில் குடும்ப நட்பு ஏற்பட்டு அவர்கள் அன்று என்.பி.பி தலைவர் அனுரகுமார சந்திப்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றேன். அவர்களுடன் நிறைய கலந்துரையாடினேன். அதன் பின்னர் அவர்கள் அலுவலகத்திலேயே அவரவர் பிளேட் எடுத்து சாப்பிட்டு அந்த பிளேட்டை கழுவி உரிய இடத்தில் வைப்பது, மிச்சம் சோறு இல்லாமல் முற்றாக பிளேட்டில் இருந்து சோற்றினை சாப்பிடும் முறை ..இது எமது இஸ்லம் மதத்திலும் உள்ளது. இவ்வாறு அவர்களின் எளிமையான வாழ்க்கை முறை எனக்கு பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் கட்சியில் ;இணைந்திருந்தேன். அதன் பின்னர் கடந்த முறைத் தேர்தலில் வாக்கு கேட்க அழைத்தார்கள். அத்தருணத்தில் நான் விபத்தொன்றில் சிக்கியிருந்தேன். 


 இம்முறை அவர்களாகவே எனக்கு அழைத்து கொழும்பு மாவட்டத்தில் ;முஸ்லிம் சார்பாக என்னையும் தமிழ் வேட்பாளர் சார்பாக சிவாவையும் நியமித்திருக்கிறார் கள். எனது மருதானை கலீல் வைத்தியசாலை கட்டிடத்திலேயே கடந்த 3 வருடமாக கட்சி  அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு ஜனாதிபதி அநுரகுமார அடிக்கடி கட்சி அலுவலகல் விடயங்களுக்கு இங்கு வந்துள்ளார்.


கே. தற்பொழுது உங்கள் கட்சி பிரச்சார நடவடிக்கைகள் கொழும்பு மாவட்டத்தில் எவ்வாறு நிகழ்கின்றது.


ப. எமது கட்சியின் தலைவர் அரசியல் குழுவில் கொழும்பு மாவட்டத்தில் பிரதமர் ஹருனி தலைமையில் வேட்பாளர்கள் நியமித்துள்ளது. அதில் நாங்கள் ஒருபோதும் விருப்பு வாக்குக்காக பணம் செலவழித்து அவர் வெட்டி இவரை வெட்டி ஓடுவதில்லை. உதாரணமாக எனக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பது போன்ற சிங்கள மக்கள் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதே போன்று சிங்கள தமிழ் மக்கள் ஏனையோருக்கு தமது 3 விருப்பு  வாக்குகளை இடல் வேண்டும். நான் தெஹிவளை முஸ்லிம் பிரதேசங்களில் செல்லும் போது என்னுடன் எங்கள் சிங்கள வேட்பாளரும் வருவார். எனது கொழும்பு மத்தியில் செல்லும் போது சிவா போன்ற வேட்பாளர்களை அழைத்துக் கொண்டு செல்வோம் அதில் எங்களது பிரதம மந்திரி ஹரிணி க்கும் எமது ஆதரவாளர்கள் விருப்பு வாக்கு விடுவார்கள் நாங்கள் பெரிதாக போஸ்டர் , கட்அவுட் அடித்து அதற்கு பாரிய பணம் செலவழிக்காமல் கட்சிக்கு நாம் இலங்கையர் என்ற ரீதியில் நாம் கூடுதலான விருப்பு வாக்குகளை எடுத்தல் வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சியில் நாம் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர் அதனால் இக் கட்சியை விரும்புவர்கள் சிறந்த ஆட்சி மாற்றம் ஊழல் அற்ற ஆட்சி மக்களுக்கு சீரான சேவைகளை பெறுவதற்கு இம்முறை அமோக வெற்றி பெறுவோம். அதே போன்று 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணர்கள் எமது கட்சி ஊடாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் கள். அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன்…..

  

ஆகவே குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஓர் புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்நோக்கி பயணியுங்கள். நமது எதிர்கால சந்ததியினருக்கு புதிய சிந்தனை கொண்ட அநுரகுமார ஜனாதிபதி தலைமையில் இக்கட்சியை ஆதரியுங்கள் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கு மாறிக் கொள்ளுங்கள். நமது எதிர்கால சமுகத்திற்கு புதிய இளைஞர் அரசியல் பிரதிநிதிகள் பாராளுமன்றம் அனுப்புங்கள் என வேண்டிக் கொள்கிறேன். 

No comments

Powered by Blogger.