Mp ஆகுவாரா முனீர் முளப்பர்..?
- இஸ்மதுல் றஹுமான் -
மெளலவி முனீர் முளப்பர் எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
அதற்கான வேற்பாளர் நியமனப் பத்திரத்தில் இன்று 9ம் திகதி கையெழுத்திட்டார்.
கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் இவர் போட்டியிடுகிறார்.
2015 ஆண்டில் மக்கள் விடுதலை முன்னனியில் (ஜே.வி.பி.) இணைந்து கொண்ட மூனீர் முளப்பர் தற்போது தேசிய மக்கள் சக்தியின் நிரைவேற்றுக் குழு உறுப்பினராவர்.
இவர் கட்சியின் "நாம் மனிதர்" வேலைத்திட்டத்தின் ஊடாக இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டார்.
முஸ்லிம்கள் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதில் பெரும் பங்களிப்பும செய்துள்ளார். இன நல்லிணக்கம் சகவாழ்வுக்காக தன்னை அர்ப்பனித்துள்ள முளப்பர் 2015 இனக்கலவரத்திற்கு எதிராக செயல்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பிரதான பேச்சாளர்களில் ஒருவராக கலந்து கொள்கிறார்.
மாத்தறை, மீயெல்ல கிராமத்தில் பிறந்த 44 வயதான இவர் கம்பஹா மாவட்டத்தில் மினுவன்கொடையில் திருமணம் முடித்து தற்போது திஹாரியில் வசித்து வருகிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான முஸ்லிம்கள், அநுர குமார் திசாநாயக்கவுக்கு வாக்களித்துள்ள பின்னனியில் சுமார் 95 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் களம் இறங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் நடந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஜே.வி.பி. சார்பாக ஒரேயொரு முஸ்லிம் பெண்மணி அன்ஜான் உம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment