Header Ads



சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் M.I. உமர் அலி, சட்டத்தரணியாக பிரதம நீதியரசர்முன் சத்திய பிரமாணம்


நிந்தவூர் 18 ஆம் பிரிவினைச் சேர்ந்த சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தரான    M.I. உமர் அலி JP அவர்கள் சட்டத்தரணியாக இன்று -22.10.2024- உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். 


அகமது லெப்பை உடையார் முகமது இஸ்மாயில், உமர் கத்தா உம்மு சல்மா தம்பதிகளின் புதல்வனாகிய இவர் கடந்த 30 வருடங்களாக தாதியத் துறையில் இணைந்து சேவையாற்றி வருகின்றார். 


தொழில் வாண்மையான உளவளத் துணையாளரான இவர் தாதிய பட்டதாரியாவார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது சட்ட இளமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவுடன் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செயல்முறை பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்து இருந்தார். 


நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஸ்தாபகர்களுள் ஒருவரான இவர் ஆரம்பம் முதல் இறுதி வரை நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவரராவார்.


CHA-Center for Humanitarian Activities அமைப்பின் தலைவராக இவர் பல்வேறுபட்ட சமூக நல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.


ஜப்னா முஸ்லிம் இணைய செய்தித்தளத்தின் செய்தியாளராகவும் கட்டுரையாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.