Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - பல அரசியல்வாதிகள் சிறைப்பிடிக்கப்படுவர் என அச்சமடைந்துள்ளனர்


(எம்.வை.எம்.சியாம்)


உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­பு­லத்தை கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தென்­பது பெரிய விட­ய­மல்ல. அதனை செய்­வ­தற்­கான ஆர்வம் இல்­லா­மையே இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும். தாக்­கு­தலின் பின்­பு­லத்தை தேடி கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அர­சி­யல்­வா­திகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்­படும். இல்­லா­விட்டால் வீடு செல்ல வேண்டும். இதன்­கா­ர­ண­மா­கவே இந்த தாக்­குதல் தொடர்­பான உண்­மைகள் மூடி மறைக்­கப்­பட்­டுள்­ள­தாக கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் கொழும்பு மறை­மா­வட்­டத்தின் ஊடகப் பேச்­சாளர் அருட்­தந்தை சிறில் காமினி தெரி­வித்தார்.


ஊட­க­வி­ய­லாளர் சுனந்த தேசப்­பி­ரிய எழு­திய உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் தீர்க்­கப்­ப­டாத மர்­மங்கள் எனும் தலைப்பில் எழு­தப்­பட்ட புல­னாய்வு நூல் வெளி­யீட்டு நிகழ்வின் செய­ல­மர்­வொன்று நேற்­று­முன்­தினம் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.


இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இந்த உயிர்த்த ஞாயி­று ­தாக்­குதல் விவ­காரம் 5 வரு­டங்­க­ளாக ஏன் இழுத்­த­டிப்பு செய்­யப்­பட்டு கொண்­டி­ருக்­கி­றது என சிலர் எம்­மிடம் வின­வு­கின்­றார்கள். நாட்டில் ஒரு அசம்­பா­விதம் இடம் பெற்றால் அதனை காலப்­போக்கில் மறந்து விட வேண்டும் எனும் கலா­சா­ரமே உள்­ளது. நாம் அவற்றை இயல்­பா­கவே மறப்­பது கிடை­யாது. உண்­மையில் அவை மறக்­க­டிக்­கப்­ப­டு­கி­றது. இந்த தாக்­கு­தலின் பின்­பு­லத்தில் உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன்­னி­றுத்த நாம் நட­வ­டிக்கை எடுத்தால் இந்த மறக்­க­டிக்­கப்­படும் கலா­சா­ரத்­தி­லி­ருந்து எம்மால் விடு­ப­ட­மு­டியும்.


இந்­த ­தாக்­கு­தலின் போது உயி­ரி­ழந்த அப்­பாவி மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக மாத்­திரம் நாம் இந்த போராட்­டத்தை முன்­னெ­டுக்க வில்லை. நாட்டில் வள­மான எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்பும் தூர­நோக்கு சிந்­த­னை­யி­லேயே இதனை நாம் செய்­கிறோம்.


இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பாரிய சதித்­திட்டம் ஒன்­றுள்­ளது. டபிள்யூ.டி.லிவேரா முதல் தட­வை­யாக இதனை குறிப்­பிட்­டி­ருந்தார். இதனை நாம் நம்­பு­கிறோம். சட்­டமா அதிபர் என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான அனைத்து தக­வல்­களும் அவ­ரி­டமே இருந்­தன. அர­சியல் சதி என்ன என்­பது தொடர்பில் அறிந்­து­கொள்­வதே தற்­போ­துள்ள விட­ய­மாகும். அது தொடர்பில் ஆணைக்­கு­ழுக்கள் கண்­ட­றிந்­துள்­ளன. எனினும் முன்னாள் சட்­டமா அதி­பரும் தற்­போ­துள்ள சட்­டமா அதி­பர்­களும் அதனை செய்­வ­தில்லை. ஏனைய கொலைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்­வது கிடை­யாது. இந்த இடத்­தி­லேயே நாம் சிக்­கி­யுள்ளோம். சட்­டமும் அதே இடைத்­தி­லேயே சிக்­கி­யுள்­ளது.


இந்த புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒரு சம்­ப­வத்தை மாத்­திரம் இங்கு குறிப்­பி­டு­கிறேன். அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட் என்­பவர் தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் வெடி­குண்டை வெடிக்­க­செய்­யாமல் சென்று விடு­கிறார். அவர் அந்த ஹோட்­டலில் இருக்கும் போது அவ­ருக்கு தொலை­பேசி அழைப்பு கிடைக்­கப்­பெற்­றது. அதற்கு அவர் பதி­ல­ளித்தார். அதனை சிசி­ரிவி காட்­சி­களில் காண முடியும். அதன் பின்­னரே அவர் தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் இருந்து வெளி­யேறி சென்றார். அந்­த­தொ­லை­பேசி அழைப்பை யார் மேற்­கொண்­டது என்­பதை கண்­ட­றிந்­தி­ருந்தால் இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் யார் இருந்தார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடியும். இது­வரை அதனை அவர்கள் செய்­ய­வில்லை.


ஜமீல் மர­ணிக்க முன்னர் உயி­ருடன் இருக்கும் போதே இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வினர் ஜமிலின் வீட்­டுக்கு சென்­றனர். உண்­மையில் அது எவ்­வாறு இடம் பெற முடியும். அவர் தொடர்பில் இரா­ணுவ புல­னாய்வு பிரி­வினர் நீண்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். ஜமில் தற்­கொலை குண்டு தாக்­குதல் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஏன் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போனது?உண்­மையில் அவர்கள் அதனை அறிந்­தி­ருக்­க­வில்­லையா? அல்­லது தெரிந்­து­கொண்டு அதனை அவர்கள் மறைத்­துள்­ளார்­களா? என்ற கேள்வி எமக்­குள்­ளது. ஜமில் உயி­ரி­ழப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கி­யுள்­ளனர் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.


முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­ப­யவின் ஆட்சிக் காலப்­ப­கு­தியில் திரிப்­பொலி எனும் இரா­ணுவப் படை இருந்­தது. உயிர்த்த ஞாயி­று ­தாக்­குதல் தொடர்­பான பல கொலைச்­சம்­ப­வங்கள் உள்­ளன. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்­னரும் பல்­வேறு கொலைச்­சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­பு­லத்தில் இருந்­த­வர்­க­ளா­லேயே அவர்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.


முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சனல் 4 விட­யங்கள் தொடர்பில் ஆராய குழு­வொன்றை நிய­மித்தார். அந்­தக்­குழு அதன் அறிக்­கைகள் ஜனா­தி­ப­திக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதன் பின்னர் அவை சட்­டமா அதி­ப­ருக்கு சமர்­ப்பிக்­கப்­பட்­ட­தாக எமக்கு தகவல் கிடைத்­தது.


ஆனால் அந்த அறிக்கை தற்­போது காணாமல் போயுள்­ளது. அந்த அறிக்­கையில் இந்த சம்­பவம் தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டக்­க­ப்பட்­டுள்­ள­தாக எமக்கு தகவல் கிடைத்­தன.


இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்ள எமக்கு இருந்த சந்­தே­கங்­களை குறிப்­பிட்டு கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு நாம் கடி­த­மொன்றை அனுப்­பினோம். கடந்த வருடம் அக்­டோபர் மாதம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கடி­த­மொன்றை அனுப்­பினோம். சனல் 4 இல் அசாத் மௌலானா கூறிய விட­யங்கள் மற்றும் குண்டுத் தாக்­குதல் இடம் பெறு­வ­தற்கு முன்னர் கள­னி­கம பகு­தியில் லொறி­யொன்றை பொலிஸார் முற்­று­கை­யிட்ட போது அந்த லொறியை விடு­விக்­கு­மாறு தேச­பந்து தென்­னக்கோன் கட்­டளை பிறப்­பித்தார். அந்த லொறி கட்­டு­நா­யக்­கவில் இருந்து பாணந்­து­றையில் உள்ள வீடொன்­றுக்கு சென்­று­கொண்­டி­ருந்­தது. அப்­போது ஏன் அந்த லொறியை சோதனை செய்ய இட­ம­ளிக்­க­வில்லை. அந்த லொறியில் வெடி­பொ­ருட்கள் இருந்­தி­ருக்கும் என நாம் நம்­பு­கிறோம். அங்கும் விசா­ர­ணையை திசை திருப்­பினார். இதனை உரிய முறையில் விசா­ரணை மேற்­கொண்­டி­ருந்­தாலே பின்­பு­லத்தை கண்­ட­றிந்­தி­ருக்க முடியும்.


சஹ்­ரா­னுக்கு தொடர்ந்தும் ஒருவர் தொலை­பே­சியில் தொடர்பு கொண்­டி­ருந்தார். அவர் தொடர்பில் ஜனா­தி­ப­தி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. உண்­மையில் அதனை ரவி சென­வி­ரத்­னவே வெளிப்­ப­டுத்­தினார். அன்று அவர் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதி­ப­ராக இருந்தார். இன்று பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக உள்ளார்.


அபூஹிந்த் யார் என்­பது தொடர்பில் தாம் தேடி பார்த்­த­தாக அவர் அன்று சாட்சி வழங்­கி­யி­ருந்தார். விசா­ரணை நீதி­பதி ஒருவர் கட­தாசி ஒன்றில் பெயர் ஒன்றை எழுதி ரவி சென­வி­ரத்­ன­வுக்கு அனுப்­பினார். ரவி சென­வி­ரத்ன அதனை வாசித்­ததன் பின்னர் நீதி­பதி அந்த நபரா இவர் என வின­வினார்.அதற்கு அவர் ஆம் என கூறினார். இந்த சம்­பவம் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்­ளது. ஆனால் அந்த கட­தா­சியில் எழுத்­தப்­பட்ட அந்த பெயர் அந்த அறிக்­கையில் இல்லை. அபூஹிந்த் என்­ப­வரே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி. அவரை தேடி கண்டு பிடிப்­பது பெரிய விட­ய­மல்ல. அதனை தேடு­வ­தற்­கான ஆர்வம் இல்­லா­மையே இங்கு உள்ள பிரச்­சி­னை­யாகும். அதனை தேடிக் கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அர­சி­யல்­வா­திகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்­படும். இல்லாவிட்டால் வீடு செல்ல வேண்டும். இதன்காரணமாகவே இந்த தாக்குதல் தொடர்பான உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.


இதன் பின்புலத்தில் உள்ள உண்மையை கண்டறிந்தால் கொலை செய்து அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் கலாசாரத்தையும் ஊழல் மிக்க மோசடி அரசியல் கலாசாரத்தையும் முடிவுக்கொண்டு வர முடியும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துவது, எதிர்காலத்தில் எவர் குற்றம் செய்தாலும் நிச்சயம் ஒருநாள் தண்டிக்கப்படுவார் எனும் பயத்தை ஏற்படுத்த முடியும். எனவே இந்த நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பொதுத் தேர்தலுக்கு முன்னர் உங்களுடைய கட்சிகளை தூய்மைப்படுத்துங்கள். கட்சிக்குள் அழுக்குகளை வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது.- Vidivelli

No comments

Powered by Blogger.