உரிய நடவடிக்கை எடுக்காததாலே பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக குற்றச்சாட்டு
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக இலங்கை கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நோய்த்தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக அதிகாரிகள் செயற்பட்டிருந்தால் இந்த பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி இருக்கலாம் என சங்கத்தின் உறுப்பினர் ஜெயலத் பாலசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, தங்களது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஏதேனும் நோய் காணப்பட்டால் உடனடியாக கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment