Header Ads



இஸ்ரேலியர், ரஷ்ய, உக்ரேனியர் பற்றி துமிந்து நாகமுவ எழுப்பியுள்ள கேள்விகள்


- Haither Sulaima Lebbe -


ரஷ்ய, உக்ரேனிய மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இங்கு குடியேற  அனுமதித்தது யார்? – துமிந்த நாகமுவ


சுற்றுலா வீசாவில் வந்த ரஷ்ய, உக்ரைன் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சிலர் இலங்கையில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கியிருப்பதாகவும், அவர்களை தங்க அனுமதித்தது சிக்கலாக இருப்பதாகவும் மக்கள் போராட்ட  முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் துமிந்த நாகமுவ நேற்று தெரிவித்தார். 


இலங்கை தொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு மற்றும் இலங்கை அரசின் பதில் தொடர்பில் மக்கள் போராட்டக் முன்னணியின் கருத்துக்களை விளக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (24) கொழும்பு லயன்ஸ் கழகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:


உலகின் பல நாடுகளில் போர் சுற்றுலாத் தொழில் (war tourism) பிரபலமடைந்து வருவதை நாம் அறிவோம். இப்போது போர் சுற்றுலா என்ற (war tourism) கருத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலைமையை முன்னைய அரசாங்கம் உருவாக்கியது.  (war tourism) செய்தால் சுற்றுலா அழியும். இது நிறுத்தப்பட வேண்டும்.


இலங்கை சட்டத்தின் படி ஒரு மாத காலத்திற்கு சுற்றுலா விசா வழங்கப்படுகிறது. இலங்கையில் அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்க முடியும் என இஸ்ரேல் படையினர் மத்தியில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


இத்தகைய சியோனிஸ்டுகள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் வெலிகம மற்றும் அறுகம்பேவைச் சுற்றிலும் கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த இஸ்ரேலியர்களில் சிலர் ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டில் தங்கியுள்ளனர்.


 இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்கள் எப்படி இலங்கையில் வியாபாரம் செய்ய முடியும் என்பதுதான் இப்போதைய கேள்வி. இலங்கையில் தங்கள் மத நம்பிக்கைகளை எப்படி கடைப்பிடிக்கிறார்கள்? இந்த நாட்டின் விசா சட்டங்களை எப்படி அவர்கள் தொடர்ந்து மீற முடியும்? இது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் ஏன் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை.


தற்போதும் அறுகம்பே, வெலிகம பிரதேசங்களில் இவர்களது சமய நிலையங்களும் வியாபார நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாது. இவற்றுக்குள் போரை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.


தற்போது நாட்டில் புதிய அரசாங்கம் வந்துள்ளது. நாங்கள் இப்போது சொல்கிறோம், இந்தப் பிரச்சினை மேலும் செல்லாமல் உடனடியாகத் தலையிட வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டாம். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள். அடுத்த விடயம் இலங்கைக்குள் போர்ச் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதை நிறுத்துவதுடன் சியோனிஸ்டுகளுக்கு நாட்டிற்குள் தீவிரவாதப் பிரச்சாரங்களை மேற்கொள்ள அனுமதிப்பதை நிறுத்த வேண்டும்.


சிங்களத்தில் - அனுராதா ஹிரிபிட்டிய



No comments

Powered by Blogger.