Header Ads



நான் தவறு செய்யாததினால் எவரும் கொல்லவோ, அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள்


முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.


தாம் பிரமுகர்களின் பாதுகாப்பை விரும்பும் நபர் அல்ல எனவும், பிரமுகர்களின் பாதுகாப்பை நீக்கினால் பிரச்சினையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.


தான் எந்த தவறும் செய்யாத காரணத்தினால் எவரும் தம்மை கொல்லவோ அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் என நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒருவர்  மனநலம் குன்றியவர்போல நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற வன்முறைகள் சாத்தியமாகும் என்றார்.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் நேற்று முன்தினம்(29) தெளிவுபடுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.