சின்வார் எப்படி இறந்தார்..?
பின்னர், இந்த போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவர்களின் டாங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
யஹ்யா சின்வார் ஒருவரைத் தவிர, அனைத்து போராளிகளும் இறந்தனர்.
இஸ்ரேலிய இராணுவம், பின்னர் யஹ்யா சின்வார் மீது, தோளில் இருந்து ஏவக்கூடிய, வெடிக்கும் ஏவுகணையை வீசியது, அதுவும் அவரைக் கொல்லவில்லை.
பின்னர் இஸ்ரேலிய இராணுவம், யஹ்யா சின்வாரின் திசையில் ஒரு FPV ட்ரோனை ஏவியது, அவர் எழுந்து நின்று, சில கற்களை அல்லது கம்புகளை சேகரித்து ட்ரோனைத் தாக்க முயன்றார்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரன், யாஹ்யா சின்வார் ட்ரோனை தாக்கும் போது, அவரது தலையை இலக்குவைத்து சுட்டுள்ளான், (வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன)
அதுவரை ஆக்கிரமிப்பு இஸ்ரேலுடன், நேரடி மோதலில் ஈடுபட்ட யஹ்யா சின்வார், தியாகியாகி மரணத்தை தழுவினார்.
இது படங்களில் காணப்படும் புல்லட் காயத்தை விளக்குகிறது.
சுரங்கங்களில் மறையவோ, பொது மக்களுக்கு இடையில் ஒளியவோ, அல்லது சரணடையவோ இல்லாமல் இறுதிவரை போராடி உயிர் துறந்தார் யஹ்யா சின்வார். தகவல் - மெக்த்ரோன்
Post a Comment