யஹ்யா.... பெயருக்கு ஏற்றார் போல் உயிர் வாழ்ந்த தலைவன்
சுரங்கத்தில் ஒளிந்திருக்கவில்லை. யாரும் அடையாளம் காண முடியாத ரகசிய இடத்தில் தங்கவில்லை. போர்க்கவசம் அணிந்து சியோனிச எதிரியுடன் நேருக்கு நேராக நடந்த, சண்டையில் ஒரு தலைவர் தனது உயிரை தியாகம் செய்திருக்கிறார் என்றால், அது எவ்வளவு அழகான சமர்ப்பணம்! எவ்வளவு சிறந்த முன்னுதாரணம்!
(அல்லாஹ் அவருக்கு ஷஹாதத் அந்தஸ்தை வழங்கி சுவனத்தின் உயர்ந்த ஃபிர்தவ்ஸை வழங்குவானாக)
இந்த உம்மத்தின் தொடக்கத்தில் உம்மத்தின் உன்னத தலைவர் போரில் கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டு சிலர் பீதியடைந்த போது அல்லாஹ் அளித்த பதில் தான் இந்த உம்மத்தை எப்போதும் வழிநடத்தும்!
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ
"முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்.
(அல்குர்ஆன் : 3:144)
யஹ்யா.... பெயருக்கு ஏற்றார் போல் உயிர் வாழும் தலைவர்!
DrCK Abdulla
Post a Comment