Header Ads



இலங்கையில் வெளிநாட்டவர்களின் மோசடி முகாம்கள், எப்படி இயங்குகின்றன..?


இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளின் மோசடி முகாம்கள், மியன்மாரில் இலங்கைப் பிரஜைகள் சிக்கித் தவிக்கும் மோசடி முகாம்கள் போன்றவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவ தெரிவித்தார். 


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இந்த 'மோசடி முகாம்கள்' இலங்கைக்கு மிகவும் புதிய கருத்தாகும். 


"மோசடி முகாம்கள் பற்றிய இந்த கருத்து இந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் தனித்தனி இடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், பெரும்பாலும் அறைகள் மற்றும் ஒரு பெரிய மண்டபம் போன்றவற்றில் தங்கள் செயல்பாடுகளை நடாத்துகிற்னறனர். முகாம்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. இது மியான்மர் சைபர் முகாம்களில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் நிலைமையைப் போன்றது” என்று அவர் கூறினார். 


அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக டிஐஜி தல்துவ மேலும் தெரிவித்தார்.


“இந்த மோசடி முகாம் தொழிலாளர்களின் பொழுது போக்கிற்கு நீச்சல் குளம் தேவைப்படுகிறது. அவர்களின் உணவுத் தேவை போன்றவற்றிற்கு வீடும் தேவைப்படுகிறது,” என்றார். 


நிறுவனமொன்றை நடத்துவதாக கூறி மோசடி செய்பவர்கள் இருப்பிடங்களைப் பெற்று பல மாதங்களுக்கு சேர்த்து முன்பணம் வழங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 


"ஆரம்பத்தில் நிறுவனம் நான்கு நபர்களுடன் செயல்படுவது போல் காட்டலாம், ஆனால் பின்னர் அது ஒரு இடத்தில் சுமார் 50 நபர்களாக மாறலாம். அது அந்த வலையமைப்பின் நோக்கத்தில் தங்கியுள்ளது. பின்னர் லேப்டாப், டெஸ்க்டாப் போன்ற உபகரணங்கள் அந்த இடத்திற்கு கொண்டு வரப்படுகின்றன,” என்றார்.


இந்த மோசடி செய்பவர்கள் இலங்கையில் உள்ளவர்களை மட்டும் குறிவைக்கவில்லை, உலகளாவிய ரீதியிலும் இலக்கு வைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். 


நிகழ்நிலை நிதி மோசடிகளில் ஈடுபட்டதற்காக 150 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான சீனர்கள் சமீப காலங்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

No comments

Powered by Blogger.