இஸ்ரேல் மீது ஈரானியப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பிரஜைகள் மத்தியில் காயங்களோ உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பணியாளர்கள் அவர்கள் விவசாய நிலத்தில் இருந்தாலும் அறைகளில் இருந்தாலும் அவர்களுக்கென விசேடமான உயிர்ப்பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவை வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக இஸ்ரவேலர்களுக்கும் அவை வழங்கப்படமாட்டாது. அவை அனைத்தினதும் இலக்ரொனிக் சுவிட்ச் இஸ்ரவேலில் உள்ள இலங்கைத் தூதுவர் கையில் இருக்கின்றது. எனவே இஸ்ரவேலில் என்ன யுத்தம் நடைபெற்றாலும் அதனால் ஒரு இலங்கையருக்கும் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் வரமாட்டாது. எனவே இஸ்ரவேல் பற்றி எரிந்தாலும் அங்கு வாழும் இலங்கையர்கள் முழுப்பாதுகாப்புடன் இருப்பார்கள். அதற்கு உத்தரவாதம் ஏற்கனவே வௌிநாட்டு தொழில் பணியக பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் மனூஷ நாநாயக்காரவின் வேண்டுகோளின் பேரில் அந்த ஏற்பாடுகளை இஸ்ரவேல் அரசு செய்து, ஒரு தலைக்கு பத்தாயிரம் டொலர் சன்மானமும் மனூஷாவுக்கு வழங்கப்பட்டதாக கேள்வி.
ReplyDelete