Header Ads



பின்வாங்கினார் வீரவன்ச, அனுரகுமாராவுக்கு மறைமுக ஆதரவு


 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.


“ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என வீரவன்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் என்றும் கூறினார்.


ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை "இரண்டாம் கோட்டாபய" ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவ்வாறான முயற்சிகளுக்கு தேசிய சுதந்திர முன்னணி அதில் ஒரு கட்சியாக இருக்காது எனவும்பின்வாங்கினார்

No comments

Powered by Blogger.