Header Ads



இஸ்ரேலுக்கு செல்லவுள்ள, லெபனான், சிரியாவில் உள்ள இலங்கையர் கவனத்திற்கு...!!!

 


எந்தவொரு நோக்கத்திற்காகவும் இஸ்ரேலுக்குச் செல்ல எவரேனும் தயாராக இருந்தால், அந்த வௌிநாட்டு பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் மற்றும் லெபனானின் தற்போதைய போர் நிலைமை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனை விளக்கினார்.


"போர் நிலைமையை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


யாரேனும் இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்பினால், வெளியுறவு அமைச்சகத்தை முழுமையாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


“இஸ்ரேலில் உள்ள இலங்கையர் ஒருவர் மீண்டும் இந்த நாட்டுக்கு வர விரும்பினால், அவர் தூதரகத்துக்குத் அறிவிக்க வேண்டும்.


தற்போது சுமார் 12,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகின்றனர்.


இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி இந்த ஆண்டு கட்டுமானத் துறை மற்றும் விவசாயத் துறைக்கு சுமார் 6,700 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.


சுமார் 5000 பேர் செவிலியர் பணிக்கு சென்றுள்ளனர்.


தற்போதைய போர் நிலைமையால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.


தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


தேவைப்பட்டால், தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.


அந்நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் இடம்பெறுகிறது. ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்" என்றார்.


லெபனானின் நிலைமை குறித்தும் அவர் குறிப்பிடும் போது,


“லெபனானில் சுமார் 7,600 பேர் வேலை செய்கிறார்கள்.


தூதரகம் எல்லா நேரங்களிலும் இலங்கையர்களுக்கு ஆதரவாக நிற்கிறது.


சுமார் 28 பேர் பாதுகாப்பு கோரி வந்துள்ளனர். அவர்கள் இரு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


லெபனானில் உள்ள எந்தவொரு இலங்கையர்களும் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.


அந்தத் தகவல் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையர் ஒருவருக்கும் விபத்து ஏற்படவில்லை.


இலங்கைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தூதரகங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்." என்றார்.

No comments

Powered by Blogger.