அறுகம்பையில் யூத வழிபாட்டுத் தலம், ஹீப்ரு பதிவுகள் - உள்ளூர்வாசிகள் அதிருப்தி (ஆதாரங்கள் இணைப்பு)
சமூக ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ கடந்த வாரம் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் 'சினகோக்' (யூத வழிபாட்டுத் தலம்) ஒன்றை நிறுவியதை தெரியப்படுத்தினார்.
பெர்னாண்டோ, கடந்த வாரம் அருகம் விரிகுடாவில் ஹீப்ரு மொழியில் பலகைகள் கொண்ட பல ஹீப்ரு பதிவுகள், கடைகள் மற்றும் உணவகங்கள் தோன்றியதாக செய்திகள் பரவியதாக தனது எக்ஸ் இல் கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் மோதலால் இஸ்ரேலியர்கள் மீது விரோதம் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காகவே, “சினகொக்” பகுதியில் பொலிஸார் மற்றும் பிரதான வீதிகளில் STF படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
வழிபாட்டுத்தல படங்களைப் பகிர்ந்த சமூக ஆர்வலர், இது சுவர்கள் அல்லது கதவுகள் அல்லாத மின்விசிறிகள், தகரம் மற்றும் தாள் கூரையுடன் கூடிய கட்டிடம் எனவும் ஒரு மசூதியை அண்டிய பாதையில் அமைந்துள்ளது எனவும் கூறினார்.
மேலும், இரண்டு பொலிஸார் கட்டிடத்திற்குள் இருந்ததாகவும், ஒருவர் கண்காணிப்பு கோபுரத்தின் மீதும் இருப்பதாகவும், பலஸ்தீனத்தைப் பற்றி விசனப்படும் உள்ளூர்வாசிகள் அந்த பகுதியில் இஸ்ரேலின் இருப்பு குறித்து அதிருப்தியாக இருப்பதாகவும் கூறினார்.
Post a Comment