Header Ads



சாரா தொடர்பில் மீளவும் விசாரணை - அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிப்பு


(எப்.அய்னா)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா ஜெஸ்மின் தொடர்பில் மீள பிரத்­தி­யேக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.


நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத கேள்­வி­யாக தொடரும் நிலையில், புதி­தாக விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கத்தின் உள்­ளக தக­வல்கள் தெரி­வித்­தன.


பெரும்­பாலும் இவ்­வி­சா­ர­ணைகள், மீள பொலிஸ் சேவைக்குள் அழைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவின் கட்­டுப்­பாட்டில் இடம்­பெ­றலாம் என அந்த தக­வல்கல் தெரி­வித்­தன.


கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயர்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.


இந்த 8 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால், 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 268 பேர் கொல்­லப்பட்­ட­துடன், 27 வெளிநாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர்.


இந்த குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து மதம் மாறி திரு­மணம் செய்­தி­ருந்தார்.


இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களை நடாத்­திய குண்­டு­தா­ரி­க­ளான சஹ்ரான் ஹஸீம், ஹஸ்­தூனின் மனை­விமார் உட்­பட மேலும் பலர் சாய்ந்­த­ம­ருது- வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரவே, அதனை சுற்றி வளைத்த போது, அங்கு இருந்த தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடு­தலில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவும், அவ­ரது மகளும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் சிகிச்­சை­க­ளி­டையே சஹ்­ரானின் மனை­வி­யிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது.


அதன்­படி, குறித்த சாய்ந்­த­ம­ருது வீடு சுற்­றி­வ­ளைக்­கப்­படும் போது அங்கு இருந்­த­வர்கள் யார் யார் என்­பதை சி.ஐ.டி. வெளிப்­ப­டுத்­தி­யது. கொழும்­பி­லி­ருந்து அவர்கள் சாய்ந்­த­ம­ரு­துக்கு செல்லும் வழியே, குரு­ணாகல் மாவட்டம் – கிரி­உல்ல பகுதி துணிக்­க­டையில் அடுத்த கட்ட தாக்­கு­த­லுக்கு என சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை ஆடை­களை கொள்­வ­னவு செய்யும் சி.சி.ரி.வி. காட்­சி­க­ளிலும் அந்த தொடர் விசா­ர­ணை­களில் மீட்­கப்­பட்­டன. அந்த சி.சி.ரி.வி. காட்­சி­க­ளிலும் சாரா உள்­ளிட்­ட­வர்கள் தெளி­வாக விசா­ர­ணை­யாளர்களால் அடை­யாளம் காணப்­பட்­டனர்.


இவ்­வா­றான பின்­ன­ணியில், சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்த பயங்­க­ர­வாத கும்­ப­லைச்­சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்குமூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரனின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன. இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன.


இத­னை­ய­டுத்து அது குறித்து விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி.யின் சிறப்பு விசா­ரணை அதி­காரி கொரோனா காலத்தில் மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்த நிலையில், அதன் பின்னர் அவ்­வி­சா­ர­ணைகள் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் இந்­துக டி சில்­வ­வைடம் கைய­ளிக்­கப்­பட்­டது.


சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதிரிகளை பெற்றே, சம்­பவ இடத்­தி­லி­ருந்த உயி­ரியல் கூறு­க­ளுடன் அது ஒப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.


இந் நிலையில் சாய்ந்­த­ம­ருது வீட்டில் குண்டு வெடிக்கச் செய்யும் போது சாரா அங்­கி­ருந்­த­தாக சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் கண்­கண்ட சாட்­சியும், சாரா சாய்ந்­த­ம­ருது வீட்­டுக்கு சென்­ற­மைக்­கான அறி­வியல் தட­யங்­களும் இருக்கும் நிலையில், குண்டு வெடிப்பின் பின்னர் அவ­ருக்கு என்ன ஆனது என்ற தெளி­வான விம்பம் இது­வரை விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் இல்லை.


முதல் இரு தடவைகளில் சாரா உயிரிழக்கவில்லை என்பதை டி.என்.ஏ. பரிசோதனைகள் உறுதி செய்த போதும், இந்துக டி சில்வா மூன்றாவது முறையாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. சோதனையில் சாரா உயிரிழந்ததாக கூறப்பட்டது. எவ்வாறாயினும் இந்துக டி சில்வாவின் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், சாரா தப்பிச் சென்றமைக்கான சான்றுகள் பல கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலும், புதிதாக இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.- Vidivelli

No comments

Powered by Blogger.