Header Ads



தேர்தலில் போட்டியிடும் ரஞ்சனுக்கு, தடை வருமா..?


எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து, உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


மேலும், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்றத்துக்கு செல்ல மற்றும் வாக்களிக்க உரிமை இல்லை என உத்தரவிடுமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.