கிராமங்களிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை உருவாக்கினார்கள்
- இஸ்மதுல் றஹுமான் -
தேசிய மக்கள் சக்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரச்சினையை தீர்கும். அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ததன் மூலம் அதிகாரத்திற்கு வர முன்பே இதனை நாம் ஆரம்பித்துள்ளோம் என தேசிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் டாக்டர் ஹென்றி ரொஸாரியோ மற்றம் பயிற்றுவிப்பாளரான அருன சான்த நோனிஸ் ஆகிய இருவரும் நீர்கொழும்பு ஊடக அமையத்தில் நடாத்திய ஊடசந்திப்பின் போது கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
உதய கம்மல்பில என்பவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளவர். அவர் தேர்தலில் விருப்பு வாக்குகளை பெறுவதற்காக ஒவ்வொன்றைக் கூறுகிறார். அவருக்கு அமைச்சர் விஜித்த ஹேரத் உரிய பதிலை அளித்துள்ளார். கம்மன்பிலவின் சவால்களை நாம் கணக்கெடுப்பதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசாங்கத்தைக் கைபற்றுவதற்காக திட்டமிட்டது என்ற சந்தேகம் எமக்கு இருந்தது. சம்பவம் நடந்து சில தினங்களில் கோதாபய போட்டியிடுவதாக அறிவித்தார். அப்போது உல்லாச்பயணிகளின் வருகை 2.3 மில்லியனாக இருந்தன. 7.3 பில்லியன் வருமானம் கிடைத்தது. இவை அனைத்தும் பூச்சிய நிலைக்கு சென்றன.
நீர்கொழும்பில் அன்று பெரும்பாலானவர்கள் ராஜபக்ஷ குடுபத்திற்கு ஆதரவாக இருந்தனர். தேசிய பாதுகாப்பை காக்கக் கூடியவர்கள் அவர்கள் என்ற நிலைமயை உருவாக்க முயன்றனர்.
கிராமங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை உருவாக்கினார்கள். அது மேலும் உறுதியானது கம்பஹா மாவட்டத்தில் அவர்களின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை. காரணம் முஸ்லிம்களை பட்டியலில் சேர்ப்பதை விட முஸ்லிம்களுக்கு எதிராக பேசி நாடு முழுவதும் வாக்குகளை பெறமுடியும் என்பதனாலாகும். அதனால் இது அரசியலுக்காக செய்தது என்பது நிரூபனமாகிறது.
விசாரணை நடாத்தியபோது சிறந்த அதிகாரிகளை அவர்கள் பதவிக்கு வந்ததும் இடமாற்றினார்கள், அமைதிப்படுத்தினார்கள், சிறைக்கூடங்களில் அடைத்தார்கள்.
அந்த விசாரணை பொறிமுறையை சிறந்த முறையில் முன்னெடுத்த அதிகாரிகளை எமது அரசில் மீண்டும் நியமித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசாங்கங்களில் எமது பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பிரதான பதவிகளில் இருந்தார்கள். அவர்கள் இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சப்தமிடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அந்தக் காலத்தில் கட்சிக்குள் இருந்துகொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தது ஏன் என நாம் கேள்வி கேட்கிறோம்.
குற்றவாளிகள் அவர்கள் பக்கத்தில் இருந்ததினால் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். தற்போது அவர்கள் பதவிக்கு வந்த கட்சியை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு தாவி அனாதையாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கீழ் மட்ட குழுக்களின் பிரேரணைகளுக்கு அமைய விசேட விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்குள் உண்மையை வெளிப்படுத்திவோம் என்றனர்.
Post a Comment