வடக்கு காசாவில் இனச் சுத்திகரிப்பு - ஈமானிய பலத்துடன் போராடும் மக்கள்
13 நாட்களுக்கும் மேலாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வடக்கு காசா மீது கடுமையான முற்றுகையை மேற்கொண்டு உணவு, தண்ணீர், தண்ணீர் விநியோகத்தை தடுத்துள்ளது. அப்பகுதியின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் அதைத் தனிமைப்படுத்துவதையும் உள்ளடக்கிய 'ஜெனரல்ஸ் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது.
ஆயினும்கூட, பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவைக் காலி செய்ய மறுக்கிறார்கள்.
தங்கள் தாயகத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற உறுதியுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின், அனைத்து ஒடுக்குமுறைகளையும் மீறி, ஈமானிய பலத்துடன், குறைந்த ஆயுதம் உள்ளிட்ட வளங்களுடன், குருதிகளை ஓடவிட்டபடி போராடுகிறார்கள்.
அத்தனை நவீனகர இஸ்ரேலிய, அமெரிக்க ஆயுதங்களின் முன் நின்று போராடுகிறார்கள்.
காசா பொதுமக்களை இனச் சுத்திகரிப்புக்கு உட்படுத்துவதே சட்டவிரோத இஸ்ரேலின் நோக்கம்.
போர் வரலாற்றில் வடக்கு காசாவும், அங்குள்ளவர்களின் வீரமும் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும்.
Post a Comment