Header Ads



லால்காந்தவின் அதிரடி அறிவிப்பு - அரசியல்வாதிகளிடையே பதற்றம்


கடந்த காலங்களில் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் எதிர்கொண்டபோது முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை மக்களுக்கு வெளிப்படுத்த போவதாக தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.


இதற்கமைய ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.


கண்டி யட்டிநுவரயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மக்கள் அவதியுறும் வேளையில் இந்நாட்டு தலைவர்கள் எவ்வாறான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.


எதிர்காலத்தில் முன்னாள் அரசியல்வாதிகளின் குடியிருப்புகள் மக்களின் பார்வைக்கு விடப்படவுள்ளதான செய்தியை அறிந்து சிலர் அச்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆடம்பரமான உடமைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.


இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மக்களின் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாதவர்கள் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.


மக்கள் பணம், எவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்." எனவும் லால்காந்த கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.