புலமைப்பரிசில் பரீட்சை - இன்று உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீரல் மனுவை நவம்பர் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.
பரிட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் வினாத்தாளை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும், மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டுமெனவும் மனுதாரர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு மூலம் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு மீதான ஆட்சேபனைகளை நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பான மேலும் ஆட்சேபனைகள் இருப்பின் நவம்பர் 12ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மனுவில் உள்ள உண்மைகளை உறுதி செய்யும் வகையில், மனுவின் அடுத்த விசாரணை நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment