Header Ads



காதலியை கல்லால் தாக்கி கொன்ற காதலன்


யுவதியின் தலையில் கருங்கல்லினால் தாக்கி கொலை செய்த சந்தேகநபரான அவரது காதலன் இன்று (30) கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.


பஹலகொட, பயாகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.


நேற்று (29) இரவு பயாகல தியலகொட பிரதேச கடற்கரையில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின் அது நீண்ட நேரம் இடம்பெற்றதாகவும், இதன்போது கோபமுற்ற காதலன் காதலியை கல்லால் தாக்கியதாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சம்பவம் நடந்த இடத்தில் தலையில் தாக்கியதாக கருதப்படும் சிறிய கருங்கல்லையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


நீண்ட நாட்களாக குறித்த இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, காதலியை களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு '1990 சுவசரிய'  அம்பியூலன்ஸ் ஊடாக கொண்டு வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் மற்றும் பயாகல பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய பயாகல, மகொன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.