Header Ads



ஹிருணிக்காவின் ராஜினாமா


ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமை ஏற்க மறுத்துள்ளது. 


கொழும்பில் தனது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறி, இந்த பதவி விலகலை பிரேமச்சந்திர சமர்ப்பித்த போதும், அதனை கட்சி ஏற்க மறுத்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


இதன்படி கட்சி மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக பிரேமச்சந்திரவைத் தொடருமாறு கட்சி கோரியுள்ளதுடன் அவர் அதற்குச் சம்மதித்துள்ளார் என்றும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, தேர்தல் பிரசாரத்தின் போது ஹிருணிகா பிரேமச்சந்திரவால் அதனைச் செய்ய முடியாவிட்டால், கட்சியின் மகளிர் பிரிவின் மற்ற பெண் உறுப்பினர்கள் அவரின் பணிகளை மேற்பார்வையிட உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பின்னடைவுக்கு கட்சியில் எவரும் அமைப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை எனவும் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் தோல்விக்கு, கட்சியின் உறுப்பினர் ஒருவர், அமைப்பாளர்களைக் குற்றம் சாட்டியதாக, ஹிருணிகா பிரேமச்சந்திர குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார். 


இந்நிலையில், கட்சியில் மூத்தவர்கள், கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் அவர் அதனை விட அதிக சக்தி வாய்ந்தவர்கள் கட்சியில் இருக்க முடியாது என்றும் ஹிருணிகா வலியுறுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.