ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள்கள் வெளியிடப்படவில்லை
புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது நிறுவனங்களிலோ கடன்களையோ பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் எனும் ரீதியில் நாணயத்தாள்களில் கையொப்பமிட்டிருக்க வேண்டும், எனவே ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட தாள்கள் வெளியிடப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த சந்திப்பில் அவர் கூறினார்.
ரூ. 1 பில்லியன் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டன என்ற செய்தி பொய்யானது என ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் கூறினார்.
Post a Comment