வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை - கடலுக்கு போக வேண்டாமெனவும் அறிவிப்பு
அத்தனகலு ஓயா பெருக்கெடுத்த காரணத்தால், துனமலே பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எஸ். பி. சி. சுஷீஷ்வர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர் "கம்பஹா மாவட்டத்தினூடாக பாயும் அத்தனகலு ஓயா பெருககெடுப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் தொடர்கிறது.
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா அல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை தொடர்கிறது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மேலும் சற்று அதிகரிக்கலாம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்" என்றார்.
2
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.
Post a Comment