Header Ads



தனிவழி செல்வதற்கு முடிவு


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு கொள்கலன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 


அந்த ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக நேற்று (02) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய, விசேடக் கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) அழைப்பு விடுத்துள்ளார். 


இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் ப்ளவர் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 


இதன்போது, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியின் ஊடாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான சபை ஸ்தாபிப்பது என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் சிரேஷ்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 


அதேநேரம், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்களை உத்தியோகப்பூர்வமாகக் கைவிடுவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.