Header Ads



யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்...



லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர்  பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக்  குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவென ஒரு கவர்ச்சிகரமான கல்லறையை முன்னதாகவே உருவாக்கி வைத்திருந்தான். 


அவனது தனியான சொகுசு விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவனது சடலத்தை மீட்க மில்லியன் கணக்கான பணம் செலவழிக்கப்பட்டது. 


இருந்தும் அவனது விமானம் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டது. கடைசி வரை அவனது சடலம் கிடைக்கவில்லை. இறுதியில் தான் உறங்கவென கட்டி வைத்து கல்லறை தான் அனாதையானது. 


பிரிட்டனில் வாழ்ந்த  மிகப்பெரிய யூத செல்வந்தர்களில் ஒருவன்தான் "ரவீட் டாஸ்த்" என்பவன். எந்த அளவுக்கு அவனிடம் பணம் என்றால் சிலசமயம் பிரிட்டிஷ் அரசுக்கு கடன் வழங்கும் அளவுக்கு அவனது கருவூலத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 


ஒரு முறை தனது கருவூலத்தில் நுழைந்த போது, அதன் கதவு தவறுதலாக மூடப்பட்டது. கத்தினான், கதறினான். யாரும் வரவில்லை. காரணம் அவனது மாளிகை மிகவும் பிரமாண்டமானதாக இருந்தது. மேலும் அவன் அதிகமாக வெளியூர் செல்வதால் இந்த முறையும் வெளியூருக்கு பயணம் செய்திருக்காலம் என்று குடும்பத்தினர் கருதினர். 


ஆதலால் அவன் கத்திக் கூச்சலிட்டும் எந்தப் பயனும் இருக்கவில்லை. கடைசியில் அவனது கருவூலமே அவனுக்கு மரண சங்கை ஊதியது. முடிவாக அவன் தனது விரலால் சுவரில் இந்த வாசகத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்றான். 


((உலகின் மிகப் பெரிய பணக்காரன் பசியாலும் தாகத்தாலும் மாண்டு போகிறான்)) 


அவன் இறந்து சில வாரங்கள் கழித்தே அவன் மரணத்தை கண்டுபிடித்தனர். 


பணம் மட்டுமே எல்லாம் என்று ஆணவமாக வாழ்வோருக்கு இங்க பல செய்திகள் உள்ளன. 


நாம் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் சம்பவம்தான் நம் வாழ்வில் நடக்கவிருக்கும் மிகப் பயங்கரமான சம்பவமாகும். 


ஆனால் எப்பபது? எங்கே? எப்படி என்று யாரும் அறியார். 


மனிதன் பயணம் செய்கிறான், வீடு வந்து சேருகிறான். 


ஆனால் இறுதிப் பயணமான மரணத்தோடு வாழ்வே முற்றுப் பெறுகிறது. 


நாமெல்லாம் ஒரு நாள் புறப்படவிருக்கும் பயணிகள். 


யார் யாரெல்லாம் பிறரை நோவிக்காமல், புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.