திரைப்படங்களை வெளியிடுவதில் முறைகேடுகள்
திரைப்படங்களை வெளியிடுவதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துளலள ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தற்போதைய அரசாங்கம் அவ்வாறான முறைகேடுகள் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் முறையான அளவுகோல்களை வகுத்து முறையான ஒழுங்கில் திரைப்படங்களை வெளியிடும் என்றும் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை, இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் (NFC) மற்றும் இலங்கை அறக்கட்டளை நிறுவனம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகள் நியமனம் செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய திரைப்படக் கழகம் நவீன காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், தனியார் துறையுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய இயக்குநர் குழு தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், முன்பு திரைப்படங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வெளியிடப்பட்டன.திரைத்துறையினருக்கு வங்கிக் கடன் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Post a Comment