Header Ads



மீண்டும் உயர்ந்தது சிறிலங்கள் எயார்லைன்ஸ்


குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின்  பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் "Airline Ratings" மீண்டும் உயர்த்தியுள்ளது.


அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஒருவர் விமானி அறைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டது.


விமானம் பறக்கும் போது துணை விமானி கழிவறைக்கு சென்று திரும்பிய போது, பிறகு கேப்டன் விமானி கதவை திறக்கவில்லை.


விமானி கழிவறைக்குள் நுழைந்ததும் கேப்டன் கதவை மூடிவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.


இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமானி சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் மனித வள முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்திருந்தார்.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்படி கேப்டனின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.


சம்பவத்துடன் தொடர்புடைய கேப்டன் வஜிர வனசிங்கவும் விசாரணைகள் இடம்பெற்றுவரும் பின்னணியில் அந்தப் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.