Header Ads



ரியாத்தில் இன்று பலஸ்தீன் பற்றி உயர்மட்டக் கூட்டம் - இஸ்ரேலுடன் தொடர்பை உருவாக்க முக்கிய


பலஸ்தீனை இரு நாடுகளாக பிரிப்பதற்கான உயர் மட்டக் கூட்டம் ரியாதில் இன்று  -31- நடைபெருகின்றது.


நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தி வரும் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் இஸ்லாமிய நாடுகளினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச ரீதியான முயற்சிகளின் அங்கமாக இன்று ரியாதில் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் தலைமையிலான சர்வதேச உயர்மட்ட கூட்டம் நடைபெருகின்றது.

 

முன்னதாக இப்பிரச்சினை தொடர்பில் ஸவுதியின் கூடிய இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட குழுவின் முயற்சியின் பயனாக செப்டம்பர் மாதம் வரை பலஸ்தீனை யுதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான இரு நாடுகளாகப் பிரிப்பது என்ற திட்டத்திற்கும் பலஸ்தீன் தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கும் 149 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


இரு நாடுகளாகப் பிரிப்பதற்கு தேவையான முறையான செயற்திட்டத்தினை வகுக்கவும் அதை தொடராக நடைமுறைப்படுத்துவதற்குமான இந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஏனைய பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்கின்றனர். 


இதை அடுத்து ஐந்து நாடுகளில் மாநாடுகள் ஒன்று கூட்டப்பட்டு அவசர செயல்வடிவத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது… அத்தோடு தனி பலஸ்தீன நாடு உருவாவதே ஸவுதி இஸ்ரேலுடன் தொடர்பை உருவாக்க வைக்கப்பட்டுள்ளது முதல் நிபந்தனை என ஸவுதியின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.