ஹிருணிக்காவுக்கு நிகழ்ந்தது என்ன..?
- Siva Ramasamy -
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் மகளிர் நட்சத்திரம் அப்சரி சிங்கபாகு திலகரத்னவை முன்னிலைப்படுத்தி செயற்பாடுகள் இடம்பெறுவதால் கடும் விசனத்துடன் இருக்கிறார் ஹிருணிக்கா..
'5 வருடங்கள் உழைத்த எங்களை ஓரங்கட்டுகிறார்கள்' என்று கட்சி சீனியர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் ஹிருணிக்கா.. பெரும்பாலும் தேர்தலில் இருந்து அவர் ஒதுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
ஜலனி பிரேமதாஸவும் , நிதிப் பொறுப்பாளர் லக்ஷ்மன் பொன்சேகாவும் தன்மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் ஹிருணிக்கா..
இன்று கட்சித் தலைவர் உட்பட எவரின் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்காத ஹிருணிக்கா , மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் பதவியை துறக்கும் கடிதத்தை வட்ஸப்பிலேயே அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் தனியார் ஊடகம் ஒன்றும் ஹிருணிக்காவை மண்கவ்வச் செய்யும் வேலைகளை சூட்சுமமாக செய்கிறதாம்...
கட்சித்தலைவர் எங்களை வெல்லும் வேலைகளை பார்க்கிறாரா?அல்லது நாங்கள் தோல்வியடைவதை விரும்புகிறாரா? என்று கட்சி சீனியர்களிடம் கேட்கிறார் ஹிருணிக்கா ..
ஹிருணிக்காவுக்கு வெட்டு விழுவதற்கான காரணம் என்னவென்று, அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டேன்..
'அரச உயர்பதவியொன்றை ஒருநாள் ஹிருணிக்கா அலங்கரிப்பார் என்ற யோகம் அவரின் ஜாதகத்தில் இருக்கிறதாம். அந்த செய்தி கேள்விப்பட்டவுடன் தான் அவருக்கு வெட்டு விழ ஆரம்பித்துள்ளதாம்..'
Post a Comment