Header Ads



இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை - அமெரிக்க அதிகாரிகள் பேச்சு


இஸ்ரேலியர்கள் உட்பட இந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இணையத்தில் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெறுதல் பற்றிய கலந்துரையாடலொன்று இன்று 25.10.2024,  நடைபெற்றுள்ளது.


இஸ்ரேலிய பிரஜைகள் உட்பட இந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. 


இந்த நாட்டிற்கு வரும் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிசார் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதுடன் பல்வேறு இணைய குற்றங்களுக்கு எதிராக இலங்கை பொலிஸாருக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவை வழங்குவது தொடர்பிலும் மேலும் கலந்துரையாடப்பட்டது.

No comments

Powered by Blogger.