Header Ads



கௌரவிக்கும் விருது விழா


கலை, இலக்கியம், ஊடகத்துறை,சமூகப்பணி என்பவற்றில். சாதனை படைத்த   பல்துறை இலங்கை ஆளுமைகளைக்  கௌரவிக்கும் ஸ்கை தமிழ் அமைப்பின்  விருது விழா(Sky tamil award -2024)கடந்த சனிக்கிழமை 19.10.24 அன்று தென்கிழக்குப் பல்கலைக் கழக தொழில்நுட்பக் கேட்போர் கூடத்தில்    வெகு சிறப்பாக நடைபெற்றது. 


    இம் மாபெரும் விருது விழாவில் யாழ் அஸீம் இலக்கியம் ,ஊடகத்துறை ,ஐம்பதுவருட  ஆசிரியப்பணி  என்பவற்றுக்காக கௌரவிக்கப் பட்டார் .


       தேசிய ,சர்வதேச விருது விழாக்களுக்கு நிகராக  ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழா,   ஜே.எம்.பாஸித் தலைமையில் நடைபெற்றது.


இலங்கை  ஒலிபரப்புக்கூட்டுத்தாபன  ஆலோசகர்  புரவலர் ஹாஸிம் உமர்,தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உட்பட  பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



No comments

Powered by Blogger.