Header Ads



சாரா உயிருடன் உள்ளாரா..? அவரது பெயரில் சிம் அட்டையா..??


(எப்.அய்னா - 
Vidivelli)


புலஸ்­தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது விடை வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத கேள்­வி­யாக தொடர்­கி­றது.


ஒரு தரப்பு சாரா இறந்­து­விட்­ட­தாக சொல்­கி­றது. இன்­னொரு தரப்பு தப்பி இந்­தி­யா­வுக்கு சென்­ற­தாக சொல்­கி­றது. மற்­றொரு தரப்பு அவர் இரா­ணுவ முகாம் ஒன்­றுக்கு அழைத்து செல்­லப்­பட்டு கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என ஊகம் வெளி­யி­டு­கின்­றது.


ஆனால், சாரா சாய்ந்­த­ம­ருது ‍ வொலி­வே­ரியன் கிரா­மத்தில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி நடந்த வெடிப்புச் சம்­ப­வத்தின் பின்னர் அங்­கி­ருந்து தப்பிச் சென்றார் என்­ப­தற்கு ஏரா­ள­மான சான்­றுகள் இது­வரை வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் அங்கு சாரா இறந்தார் என்­ப­தற்கு ஒரே ஒரு டி.என்.ஏ. அறிக்கை மட்­டுமே சான்று பகர்­கின்­றது. அதிலும் அந்த டி.என்.ஏ. அறிக்கை சர்ச்­சைக்­கு­ரி­யது. அதற்கு முன்னர் நடந்த இரு டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களில் சாரா அங்கு உயி­ரி­ழந்­த­மையை உறுதி செய்ய முடி­யாது போன பின்­ன­ணியில், கடந்த 2019 ஆட்சி மாற்­றத்தின் பின்னர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ அரசு, சாரா விட­ய­த்தை கையாள நிய­மித்த சி.ஐ.டி.யின் மனித படு­கொலை விசா­ரணை பிரிவு பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த இந்­துக டி சில்வா (இவர் தற்­போது பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு பொறுப்­புக்கள் எதுவும் இன்றி இட­மாற்­றப்­பட்டு ஒழுக்­காற்று விசா­ர­ணை­களை முகம்­கொ­டுத்­துள்ளார். பெண் ஒரு­வரை புகை­யிரதத்தில் வைத்து தவ­றாக படம்பிடித்­தமை, ஊட­க­வி­ய­லாளர் தரிந்து ஜய­வர்­த­னவை கைது செய்ய சதி செய்­தமை ஆகிய விட­யங்கள் தொடர்பில் இவ்­வி­சா­ரணை நடக்­கி­றது.


கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.


இதில் முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், சாரா சாய்ந்­த­ம­ருதில் இறக்­க­வில்லை என சந்­தே­கிக்கும் வித­மாக மற்­றொரு சான்றும் தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது. 2020 ஆம் ஆண்டே வெளிப்­பட்­டுள்ள இந்த சான்று தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வில்லை என கூறப்­ப­டு­கின்­றது.


கரை­யோர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வ­பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகிய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.


அதே தினம் பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதா­ரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம் பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை இலக்கு வைத்து தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்­கொலை குண்­டு­தா­ரி­யினால் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது.


இந்த 8 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால், 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 268 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 27 வெளு­நாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர்.


இந்த குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து மதம் மாறி அவனை திரு­மணம் செய்­தி­ருந்தார். அவ­ரது திரு­மணம் குறித்த சர்ச்­சை­களை இக்­கட்­டுரை ஆரா­ய­வில்லை. ஆனால் இந்த விவ­கா­ரத்தில் சிறி­லங்கா தெளஹீத் ஜமா அத்தின் அப்­போ­தைய தலைவர் அப்துல் ராசிக் உள்­ளிட்­ட­வர்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் மீள விரி­வான விசா­ர­ணைகள் செய்ய வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது. ஏனெனில் இவர்கள் இலங்­கையின் உள­வுத்­து­றை­யோடு இணைந்து செயற்­பட்­ட­மைக்­கான ஆதா­ரங்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு­வரின் அலு­வ­ல­கத்தில் நடந்த சந்­திப்­புக்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன.


இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களை நடாத்­திய குண்­டு­தா­ரி­க­ளான சஹ்ரான் ஹஷீம், ஹஸ்­தூனின் மனை­விமார் உட்­பட மேலும் பலர் சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரவே, அதனை சுற்றிவளைத்த போது, அங்கு இருந்த தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­ட­தாக கூறப்­பட்­டது. அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடு­தலில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவும், அவ­ரது மகளும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் சிகிச்­சை­க­ளி­டையே சஹ்­ரானின் மனை­வி­யிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது. (சஹ்­ரானின் மனை­விக்கு எதி­ராக கல்­முனை மேல் நீதி­மன்றில் வழக்­கொன்று தொட­ரப்­பட்­டுள்­ளது. சாராவின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு கூறாமை குற்­றச்­சாட்­டாகும்)


அதன்­படி, குறித்த சாய்ந்­த­ம­ருது வீடு சுற்­றி­வ­ளைக்­கப்­படும் போது அங்கு இருந்­த­வர்கள் யார் யார் என்­பதை சி.ஐ.டி. வெளிப்­ப­டுத்­தி­யது. கொழும்­பி­லி­ருந்து அவர்கள் சாய்ந்­த­ம­ரு­துக்கு செல்லும் வழியே, குரு­ணாகல் மாவட்டம் – கிரி­உல்ல பகுதி துணிக்­க­டையில் அடுத்த கட்ட தாக்­கு­த­லுக்கு என சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை ஆடை­களை கொள்­வ­னவு செய்யும் சி.சி.ரி.வி. காட்­சி­க­ளிலும் அந்த தொடர் விசா­ர­ணை­களில் மீட்­கப்­பட்­டன. அந்த சி.சி.ரி.வி. காட்­சி­க­ளிலும் சாரா உள்­ளிட்­ட­வர்கள் தெளி­வாக விசா­ர­ணை­களால் அடை­யாளம் காணப்­பட்­டனர்.


இவ்­வா­றான பின்­ன­ணியில், சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்­த­தாக கூறப்­படும் பயங்­க­ர­வத கும்­ப­லைச்­சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரனின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன.


இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன. ( ஹாதி­யாவின் வாக்கு மூலத்தை தவிர வேறு சுயா­தீ­ன­மான சாட்­சிகள் ஊடா­கவும் அவ்­வீட்டில் இருந்­த­வர்கள் யார் என்­பதை விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­தி­ருந்­தனர்)

இத­னை­ய­டுத்து அது குறித்து விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதி­ரிகளை பெற்றே, சம்­பவ இடத்­தி­லி­ருந்த உயி­ரியல் கூறு­க­ளுடன் அது ஒப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.


இந் நிலையில் சாய்ந்­த­ம­ருது வீட்டில் குண்டு வெடிக்கச் செய்யும் போது சாரா அங்­கி­ருந்­த­தாக சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் கண்­கண்ட சாட்­சியும், சாரா சாய்ந்­த­ம­ருது வீட்­டுக்கு சென்­ற­மைக்­கான அறி­வியல் தட­யங்­களும் இருக்கும் நிலையில், குண்டு வெடிப்பின் பின்னர் அவ­ருக்கு என்ன ஆனது என்ற கேள்­விக்கு பதில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இல்லை.


சாய்ந்தமருது வெடிப்பின் பின்னர், அப்­பி­ர­தே­சத்­துக்குப் பொறுப்­பான பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எனும் ரீதியில் கல்­முனை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி கல்­முனை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்­கையில் அங்கு 16 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் இரு நாட்­க­ளுக்கு பின்னர், சம்­பந்தமே இல்­லாத அம்­பாறை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி மேல­திக அறிக்கை ஒன்­றினை தாக்கல் செய்து வெலி­வோ­ரியன் கிரா­மத்தில் இறந்­த­வர்­களின் எண்­ணிக்கை 17 என குறிப்­பிட்­டி­ருந்தார். இதன்­போது 2019 ஏப்ரல் 28 ஆம் திகதி, அப்­போ­தைய அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சாமந்த விஜே­சே­கர எஸ்.பி./ ஏ.பி/ பி.ஏ./ அவூட்/ 545/19 எனும் இலக்­கத்தின் கீழ் சி.ஐ.டி. இன­ருக்கு ஒரு வழக்குப் பொருள் பொதி அனுப்­பப்பட்­டி­ருந்­தது. அதில் சாரா அல்­லது புலஸ்­தினி மகேந்­ர­னுக்கு சொந்­த­மா­னது என சந்­தே­கிக்­கப்­பட்ட பணப் பை ஒன்று அனுப்­பப்பட்­டி­ருந்­த­துடன் அதில் ஒரு அடை­யாள அட்­டையும் இருந்­தது.


சாரா­வுக்கு அல்­லது புலஸ்­தினி மகேந்­ர­னுக்கு இரு அடை­யாள அட்­டைகள் இருந்­துள்­ளன. ஒன்று சாரா ஜெஸ்மின் எனும் பெய­ரி­லா­னது. மற்­றை­யது புலஸ்­தினி மேகேந்ரன் எனும் பெய­ரி­லா­னது.


இதில் முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், சாரா சாய்ந்­த­ம­ருதில் இறக்­க­வில்லை என சந்­தே­கிக்கும் வித­மாக மற்­றொரு சான்றும் தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது. 2020 ஆம் ஆண்டே வெளிப்­பட்­டுள்ள இந்த சான்று தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வில்லை என கூறப்­ப­டு­கின்­றது.


ஆம், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி, புலஸ்­தினி மகேந்ரன் எனும் பெயரில் உள்ள சாராவின் 1999656702702 எனும் அடை­யாள அட்­டையில் ஒரு சிம் அட்டை கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது. 0717173928 என்­பது அந்த இலக்கம். சி.ஐ.டி.யின் உள்­ளக தக­வல்கள் பிர­காரம் இந்த இலக்கம் தொடர்பில் இது­வரை முறை­யான விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை. காரணம் இந்த புலஸ்­தினி மகேந்ரன் எனும் பெயரில் உள்ள சிம் அட்டை ஊடாக‌, கொள்­வ­னவு செய்­யப்­பட்ட தினத்­தி­லி­ருந்து சந்­தே­கிக்­கத்­தக்க அழைப்­புக்கள் எடுக்­கப்பட்­டுள்­ளன. அவ­வ­ழைப்­புக்கள் 6 செக்­கன்கள் வரை மட்­டுமே நீடித்­தவை. ஆனால் அதன் விப­ரத்தை ஆராய்­கின்ற போது அழைப்­பெ­டுத்த இலக்­கத்தின் விப­ரப்­பட்­டி­யலில் மட்டும் (சாராவின் பட்­டியல் ) பதி­வுகள் இருப்­ப­துடன் அழைப்­புக்கு பதி­ல­ளித்த நபரின் பட்­டி­யலில் அவ்­வ­ழைப்பு தொடர்பில் எந்த பதி­வு­களும் இல்லை.


இதுவே மிகப் பெரிய சந்­தே­கங்­க­ளுக்கு காரணம். இவ்­வா­றான ஒரு அழைப்பை அழைப்புப் பட்­டி­யலில் இருந்து நீக்க, அதற்குள் செல்­வாக்கு செலுத்தும் தரப்­பொன்­றினால் அல்­லது, அது சார் கரு­வி­களை பயன்­ப­டுத்தும் ஒரு­வரால் மட்­டுமே செய்ய முடியும்.


அவ்­வ­ழைப்பின் கோபுரத் தக­வல்­களை ஆராயும் போது அக்­கா­லப்­ப­கு­தியில் மரு­த­முனை, கல்­முனை பகு­தி­களில் அவ்­வி­லக்கம் காண்­பிக்­க­ப்பட்­டுள்­ளது.

என்வே சாரா, 2019 ஏப்ரல் மாதம் வெலிவோரியன் கிராமத்திலிருந்து தப்பி, அதனை அண்டிய பகுதியில் தங்கியிருந்தாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

குறிப்பாக வெலிவோரியன் கிராமத்தில் சாரா உள்ளிட்டவர்கள் தங்கியிருந்த வீடானது இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது அவ்வீட்டின் பின் பகுதியால் அமையப் பெற்றுள்ள வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சாராவை அழைத்து சென்றதாக சாட்சிகள் உள்ளன. சஹ்ரானின் மனைவியையும் மகளையும் காப்பாற்றிய, அங்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த இராணுவ பிரிகேடியர் சுதுசிங்கவும் கல்முனை மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கும் போது, அவ்வீட்டிலிருந்த எவருக்கேனும் தப்பிச் செல்ல வேண்டுமாக இருந்திருப்பின் அதற்கான அவகாசம் இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டார்.


இவ்வாறான நிலையில், சாரா தப்பிச் சென்றமைக்கு மேலதிகமாக தற்போது அவரின் பெயரில் சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கு பின்னர் ஒரு சிம் அட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்ற‌ தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- 

No comments

Powered by Blogger.