Header Ads



நீதிபதிக்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட, அச்சக உரிமையாளரும் கைது


- இஸ்மதுல் றஹுமான் -


    மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சக உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


    மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் அவர்களுக்கு எதிராக அவரின் புகைப்படத்துடன் அவரை இழிவுபடுத்தும் சுவரொட்டிகள் கொழும்பில் பல இடங்களில் ஒட்டப்பட்டன.


 இது தொடர்பாக விசாரணை  நடாத்தும் கொழும்பு குற்றவியல் திணைக்கள புலனாய்வு பிரிவினர் இதுவரை ஏழு சந்தேக நபர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


       எட்டாவது சந்தேகநபராக சுவரொட்டிகளை அச்சிட்ட யக்கல பிரதேச அச்சக உரிமையாளரான தசுன் தரங்க என்பவர் கைது செய்யப்பட்டார்.


      கொழும்பு  நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி திலின கமகே முன்னிலையில் கொழும்பு குற்றவியல் திணைக்கள ஒருங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சதுரங்க, பொலிஸ் சார்ஜன் பண்டார ஆகியோர் சந்தேக நபரை ஆஜர்படுத்தி சந்தேக நபர் சுவரொட்டிகளை அச்சிட 43500 ரூபா பணத்தை பெற்றுள்ளதாக மன்றில் தெரிவித்தனர்.


   சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டதரணி  தனது சேவை பெறுனர் சுவரொட்டிகள் தொடர்பாக தெரியாதெனவும் அவரது ஊழியர்கள் அதனை அச்சிட்டுள்ளதாகவும் கூறி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரினார்.


  சிங்களத்தில் இருந்த சுவரொட்டியை அச்சிட பாரமெடுத்து அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகும் அது தொடர்பாக தெரியாது எனக்கு கூறுமளவு அறிவில்லாத ஒருவரா என நீதவான் வினவினார்.


 இதன் அடிப்படையில் பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


No comments

Powered by Blogger.