அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்திற்குள் குழப்பம்
விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை விமானி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமான பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ளெியாகி உள்ளன.
இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
2
செப்டெம்பர் 21ஆம் திகதி, சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த UL607 இலக்க விமானத்தின் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த அதிகாரிகளுக்கு இலங்கை விமானப்படை முழுமையாக ஒத்துழைப்பதாகவும் விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை அதன் கேப்டன் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்கி செயற்படுவதும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முதன்மை பணியாகும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment