எமக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாகிவிட்டன - அநுரகுமார
வெற்றிக்கான களுத்துறை கூட்டம் - 2024.10.27. சனாதிபதி தேர்தலில் எமக்கெதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாகிவிட்டன. அரசியல்பற்றிய அனுபவம்கொண்ட நாட்டைப் பற்றிச் சிந்திக்கின்றவர்களைக்கொண்டே பாராளுமன்றத்தை நிரப்பவேண்டும் - சனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க
சனாதிபதி தேர்தலில் எமக்கெதிராக முன்வைத்த பொய்க் குற்றச்சாட்டுகள் காரணமாக மக்கள் குழப்படைந்திருந்தார்கள்.திசைகாட்டி வெற்றிபெற்று தற்போது ஒருமாதத்திற்கு மேலாகிவிட்டது. அவையெல்லாமே பொய் என்பது உறுதியாகிவிட்டது. பாராளுமன்றத்திற்கு அனுபவம் வாய்ந்தவர்களை அனுப்பிவைக்குமாறு எதிர்த்தரப்பினர் மேடைகளில் கூறுகிறார்கள். திருடப் பழகிய, சட்டவிரோத செயல்களைப் புரிகின்ற, பாராளுமன்றத்திற்க மிளகாய்த்தூள் கொண்டுவந்த, கத்தியை எடுத்துவந்த, ஆபாய வாரத்தைகளைக் கூறிய, தவறான தீர்மானங்களுக்கு கையை உயர்த்துகின்ற நற்பழக்கம்கொண்ட, கார் பேர்மிற், பார் பேர்மிற் வாங்கிப் பழகியவர்கள்தான் மீண்டும் வரவேண்டுமெனக் கூறுகிறார்கள். இத்தடவை பாராளுமன்றத்தை புதியவர்களால் நிரப்புங்கள் என்றே நாங்கள் கூறுகிறோம்.
இந்த நாட்டின் அரசியலை சாதகமான ஓர் அரசியலாக மாற்றியமைத்திட வேண்டும். எமது நாட்டில் அரசியல் என்பது ஒரு பிஸ்னஸ் ஆகும். மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு வந்து அந்த உறுப்பினர் பலத்தைப் பாவித்து செல்வம் ஈட்டுகிறார்கள். கொழும்பில் வீடுகளையும் காணிகளையும் கொள்வனவு செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அரசியல் பணத்தை ஈட்டுகின்ற ஒரு வழிவகையாகும். தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் என்பது மக்கள் சேவையாகும். ஒரு பிஸ்னஸாக மாறியிருக்கின்ற அரசியலை நாங்கள் மக்கள் சேவையாக மாற்றுவோம். அவர்களின் அரசியலில் ஒரு கருத்திட்டத்தை தெரிவுசெய்கையில் நாட்டுக்கு எவ்வளவு நன்மை பயக்கின்றது எனத் தேடிப்பார்ப்பதில்லை. தமக்கு எவ்வளவு கொமிஸ் கிடைக்கும் என்கின்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கருத்திட்டங்களை தெரிவுசெய்கிறார்கள். அதனால் எமது நாட்டுக்கு பரிசுத்தமான முதலீட்டாளர்கள் வருவதில்லை. நாங்கள் இதனை மாற்றியமைப்போம்.
அரசியலை பிஸ்னஸாக மாற்றிக்கொள்ள சுகாதார அமைச்சர் வருமானம் ஈட்டிக்கொள்வதற்காக மருந்திலிருந்து திருடுகிறார். மீன்பிடி அமைச்சர் சீனாவிலிருந்து ஜப்பானிலிருந்து பிடிக்கப்படுகின்ற மீனை இலங்கையில் தரையிறக்க அனுமதி கொடுக்கிறார்கள். ஒருதொகை பணத்தையும் பெறுகிறார்கள். தனக்கு கிடைகின்ற பணத்தின் அளவைப் பார்த்துக்கொண்டு தரங்குன்றிய பசளையை கொண்டுவருகிறார்கள். நியாயமான விலைக்கு எரிபொருள் கொண்டுவருவதற்குப் பதிலாக அதிக விலைக்கு வாங்குகிறார்கள். சிறந்த மின்நிலையங்களை கழற்றிக்கொண்டு போகிறார்கள். புதிதாக அமைப்பதில்லை. பாதகமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுகிறார்கள். அரசியலை ஒரு பிஸ்னஸாக மாற்றிக்கொள்ளும்போது நாட்டின் மக்கள் அனைவரும் பல்வேறு துறைகளிலும் பாதிப்படைகிறார்கள். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால் இந்த அரசியல் பிஸ்னஸை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட வேண்டும். தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் அதற்காகவே பிள்ளையார்சுழி போட்டிருக்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் குறைக்கப்பட வேண்டும். சனாதிபதிக்கா செலவுச்சுமை குறைக்கப்படவேண்டும். ஒருசில சிறப்புரிமைகள் சுற்றுநிருபங்களாலும் மேலும்சில சட்டங்களாலும் இன்னும்சில அரசியலமைப்பினாலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எப்படி நீக்குவது என்பதை கண்டறிவதற்கான குழுவொன்றை நாங்கள் நியமித்திருக்கிறோம். முன்னாள் சனாதிபதிகளின் சிறப்புரிமைகள் அனைத்தையும் நிறுத்துவோம். அவை மிகப்பெரிய செலவுகள். நூற்றி அறுபதிற்கு மேற்பட்ட வாகனங்களை வீட்டு அங்கத்தவர்களைவிட அதிக எண்ணிக்கைகொண்ட சமையற்காரர்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அரசியல் புரிந்தார்கள், சனாதிபதியானர்கள், அதனால் இளைப்பாறிய பின்னரும் அவர்களை பராமரிப்பது மக்களின் கடமை என நினைக்கிறார்கள். அது மக்களின் வேலையல்ல.
அதைப்போலவே அரச சேவையை வினைத்திறன் கொண்டதாக அமைத்திட வேண்டும். தற்போது ரூ. 5,000 கொடுப்பனவினைப்பெற, 5 கிலோ அரசி வாங்க மக்கள் பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கவேண்டும். பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள பல தடவைகள் போகவேண்டும். எமது நாட்டில் இன்னமும் இருப்பது பழைய அரச பொறியமைப்பாகும். உலக நாடுகள் தொழில்நுட்பத்துடன் ஒன்றிப்போய் விட்டன. அரசசேவையை வினைத்தினறாக்கிட நாங்கள் டிஜிட்டல்மயமாக்கலுக்குச் செல்லவேண்டும். பல வேலைகளை போன் மூலமாக செய்துகொள்ள முடியும். அரசாங்கம் கொடுக்கின்ற எந்தவொரு கொடுப்பனவும் தனது கணக்கிற்கு வரவேண்டும். நாங்கள் குறுகிய காலத்திற்குள் பிரஜைகளுக்கு தொந்தரவாக அமையாத வினைத்திறன்கொண்ட அரசசேவையொன்றை ஆரம்பிப்போம். அந்த துறையைச்சேர்ந்த பிரதான புத்திஜீவி வெகுவிரையில் இலங்கையில் சுயமாகவே பணியாற்ற வருகிறார்.
அதைப்போலவே சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படல் வேண்டும். புரிந்துள்ள மோசடிகள், ஊழல்கள் பற்றிய பலன்விசாரணைகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய ஒருசில கோப்புகள் சட்டது்தஐற தலைமை அதிபதி திணைக்களத்திடமும் மேலும் சில குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமும் இருக்கின்றன. மேற்படி சகல கோப்புகளையும் திறந்து சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக நாங்கள் உத்தியோகத்தர்களை நியமித்திருக்கிறோம். அந்த பணியை செய்யவேண்டியது அவர்களின் கடமை. அவர்களுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டியது எங்கள் வேலையாகும்.
எமது விவசாயத்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எயர் அடுக்கிற்க கொண்டுவருவோம். கமக்காரர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்போம். எமது தேயிலை சிற்றுடைமையாளர்கள், சிறிய கறுவாத்தோட்ட உரிமையாளர்களை தமது வருமானத்திற்கேற்றவகையில் முன்னேற்றகரமான தொழிற்றுறையாக மாற்ற திட்டங்களை வகுத்திருக்கிறோம். ஐ.ரீ. துறையில் பல பாரிய திட்டங்களை வகுத்திருக்கிறோம். 2025 ஆம் ஆண்டினை இலங்கைக்கு மிகவும் அதிகமான எண்ணிக்கைகொண்ட சுற்றுலாப்பயணிகள் வந்த ஆண்டாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றியமைத்திடும். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் எம்மீது நம்பிக்கை வைத்து பெருந்தொகையான பணத்தை அனுப்பிவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பினை நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம். மது கைத்தொழிலதிபர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் அவசியமான உதவிகளை நாங்கள் வழங்குவோம்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்நிற்பவர்கள். மக்களின் பணத்தை திருடியதற்கு எதிராக குரலெழுப்பியவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு தருணத்திலும் முன்வந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில் அநீதி ஏற்படுமானால் அதனை எதிர்த்து அரசியல் புரிந்தவர்களே இருக்கிறார்கள். அதைப்போலவே வெள்ளப்பெருக்கு அனர்த்தம், சுனாமி போன்ற பேரிடர்களின் மத்தியில் மக்களுக்காக உச்சஅளவில் அர்ப்பணிப்புச் செய்தவர்களே இருக்கிறார்கள். எம்மைக் குறைகூறுபவர்கள் தீயசெயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்களாவர். ஆனால் எம்மவர்களோ நல்ல செயல்களைப் புரிவதில் கைதேர்ந்தவர்கள். எதிர்வரும் தேர்தலில் புதியவர்களைக்கொண்டு எனினும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களைக்கொண்டே நிரப்பவேண்டும்.
திசைகாட்டியை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அத்தகையவர்களே. இளைஞர்களுக்கு வெறுப்புத்தட்டிய அரசியல் சமர்க்களத்தை சுத்தஞ்செய்வதற்காக பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்பி சாதகமான அரசியலை உருவாக்கவேண்டும். அவர்களுக்கோ அரசியல் என்பது பணத்தை ஈட்டுவதற்கான மார்க்கமாகும். தேசிய மக்கள் சக்திக்கோ அரசியல் என்பது மக்கள் சேவையாகும். ஒரு பிஸ்னஸாக மாற்றிக்கொண்டிருக்கின்ற அரசியலை படிப்படியாக மக்கள் சேவையாக, மக்களுக்காக செயலாற்றுகின்ற அரசியலாக மாற்றியமைத்திடுவோம். அவர்கள் ஏதேனும் கருத்திட்டம் நாட்டுக்கு நல்லதா எனப் பார்ப்பதில்லை. அதனால் பரிசுத்தமான முதலீட்டாளர்கள் இந்த நாட்டுக்கு இதுவரை வரவில்லை. அரசியலை வியாபாரமாக கொண்டிருந்தவர்களே மருந்திலிருந்தும் திருடினார்கள். அரசியல் பிஸ்னல் மூலமாக தரமற்ற பசளையைக் கொண்டுவருகிறார்கள். இதனை மக்கள் சேவையாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடேற்றிவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைக் குறைத்து அவர்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். சனாதிபதிக்கு, முன்னாள் சனாதிபதிகளுக்கு செலவிடுகின்ற செலவுச்சுமையினைக் குறைக்கவேண்டும். முன்னாள் சனாதிபதிமார்களுக்கான செலவுச்சுமையினைக் குறைக்க நாங்கள் ஏற்கெனவே ஒரு குழுவினை நியமித்திருக்கிறோம். இது ஒரு பழிவாங்கல் அல்ல. அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைப்பதாகும். எமது நாட்டில் நிலவுகின்ற பழைய அரச பொறியமைப்பு காரணமாக அரசாங்க அலுவலகங்களில் பொது உதவியைப் பெற்றுக்கொள்ளவும் வேறு எந்த சேவையையும் ஈடேற்றிக்கொள்ள வரிசையில் காத்திருக்கவும் அத்துடன் தாமதங்கள் ஏற்படவும் நேரிடுகின்றது. இந்த நிலைமையை முற்றாக மாற்றியமைத்து அரசசேவையை டிஜிட்டல்மயமாக்கி வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். இந்தியாவில் ஒரு கிவ்ஆர் கோட் மூலமாக வடை விற்பனை செய்யும்போது எமது மக்கள் ஐயாயிரம் ரூபாவை வாங்கவும், பத்து கிலோ அரிசியை வாங்கவும், அஸ்வெசும பெற்றுக்கொள்ளவும், காணிக்கான உறுதியை தயாரித்துக்கொள்ளவும் வரிசைகளில் அலைக்கழிய நேரிடுகின்றது.
குறுகிய காலத்திற்குள் இவையனைத்தையும் முற்றாகவே மாற்றியமைத்து பிரஜைகளுக்கு நெருக்கமான, வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவோம். நாட்டை சீராக்குவது எப்படி, யார் என்பதை நாங்கள் காட்டுகிறோம். ஒருசிலர் ஊழல், மோசடி பயில் எங்கே எனக் கேட்கிறார்கள். அதற்கான விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான உத்தியோகத்தர்களை நியமித்து அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பினை வழங்கி முறைப்படி சட்ட நடவடிக்கைகளுக்கு இடவசதியை ஏற்படுத்திக் கொடுப்போம். நாடகபாணியிலான அல்லது காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வேலையும் கிடையாது. படிப்படியாக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவோம்.
நாட்டின் எதிர்காலத்தை நிர்மாணிக்கின்ற பிள்ளைகளின் கல்விக்காக முன்னுரிமையளித்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமொன்று இலங்கையில் முதல்த்தடவையாக வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதைப்போலவே பெற்றோர்களை உள்ளிட்ட முதியவர்களைப் பராமரித்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பணியை முன்னெடுத்துச் செல்லாமல் தேசிய மக்கள் சக்தி மீளத்திரும்ப மாட்டாது. அவர்களின் சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் மனதை அசுவாசப்படுத்திக் கொள்வதற்கான கதைகளை தேவையான அளவில் கூறிக்கொள்ளலாம். எனினும் மக்கள் நேயமுள்ள பணிகளை பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துகையில் தடையேற்படுத்தாத உறுதியான அரசாங்கமொன்று தேவை. அதற்காக அதிகமான எண்ணிக்கை கொண்டவர்களை நவெம்பர் 14 ஆந் திகதி பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுங்கள்.
இதுவரை நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்களின் பெறுபேறு எத்தகையது? மக்கள் வறியவர்களானார்கள். ஆட்சியாளர் செல்வந்தர் ஆனார்கள். தற்போது நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திருக்கிறோம். நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பியே தீருவோம். 3% வெற்றிபெறுகின்ற விதம், மூவரைக் கொண்'ட ஒரு அரசாங்கத்தை நடாத்தி வருகின்ற விதம், சர்வதேச உறவுகளைப் பேணி வருகின்ற வி்தம், பொருளாதாரத்தை சீராக்குகின்ற விதம் எப்படி என்பதை நாங்கள் வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த அரசாங்கம் நாட்டை சீராக்குகின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற அரசாங்கமாகும். அதற்காக பாராளுமன்றத்தில் பாரிய பலம் எமக்கு அவசியமாகும். பாராளுமன்றம் மக்களுக்குப் பயனுள்ள வேலைகளை செய்யும்போது எவராலும் வீழ்த்தமுடியாத பலம்பொருந்திய பாராளுமன்றத்தை அமைத்திடவேண்டும். அவ்வாறான பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமானால் நவெம்பர் மாதம் 14 ஆந் திகதி திசைகாட்டியை சேர்ந்தவர்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டுமென்ற முடிவினை நீங்கள் எடுக்கவேண்டும்.
என்றாலும் இந்த தடவை தேர்தல் சோர்வடைந்து விட்டதைப்போல் உணர்வதாக ஒருசிலர் கூறுகிறார்கள். இதுவரை காலமும் தேர்தலை நடாத்தியவர்கள் முன்னாள் ஆட்சியாளர்களின் சண்டியர்களே. சமுர்த்தியை வெட்டிவிடுவதாக அச்சுறுத்துதல், அலங்கரிப்புக் கொடிகளை அறுத்தல், அலுவலகங்களைத் தாக்குதல் போன்றே அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கையிலெடுத்து பலவிதமான அப்ளிகேஷன் பகிர்ந்தளித்தல், அரிசி பங்கிடுதல், தகடுகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற எத்தனை செயல்கள் இடம்பெற்றன? தற்போது அவையெதுவுமே கிடையாது. அதாவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இலங்கையில் முதல்த்தடவையாக சுதந்திரமான தேர்தலுக்கு முழுமையாகவே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட தேர்தல் நல்லதில்லையா? மக்களிடம்சென்று சுதந்திரமாக கருத்துக்களை எடுத்துரைத்து அந்த மக்கள் வாக்களிக்கின்ற ஒரு தேர்தலே எமக்குத் தேவை. அத்தகைய தேர்தலை தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறோம். நாங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றல், அமைச்சரவையை நியமித்தல் போன்றே பொதுத்தேர்தல்வரை புதிய மாற்றங்களைக் குறுகிய காலப்பகுதிக்குள் அறிமுகஞ் செய்துள்ளோம். எமது ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டை நல்லதொரு திசையைநோக்கி நிச்சயமாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரும் அணிதிரள்வோம். முன்நின்று உழைப்போம் என அழைப்பு விடுக்கிறோம்.
Post a Comment