Header Ads



வாகன இறக்குமதி - புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இதோ...!


எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்யும் முறை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) விளக்கமளித்தார்.


இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவைப் பேச்சாளர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.


எந்தவொரு வகையிலும் கட்டணச் சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.


“வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னதாக எடுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த முறை அவசரமாக நாம் வாகனங்களை கொண்டு வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கட்டணச் சலுகை தரும் வாகனங்களை கொண்டு வரவில்லை.  ஆனால் வாகனங்களை இறக்குமதியை ஒரு சரியான முறைக்கு உட்பட்டு...

நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், எமது டொலர் தொகை வெளியேறாத வகையில், வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய, அந்த வாய்ப்பை வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.

தற்போது, ​​எமது அரசாங்கத்தின் புதிய தீர்மானமாக கட்டணச் சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதை செயற்படுத்தவில்லை. ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

No comments

Powered by Blogger.