கடன் சுமையில் சிக்கியுள்ளோம், நல்ல நாட்டை ஒப்படைத்திருந்தால் கடன் பெற வேண்டியதில்லை
நல்ல நாடு ஒன்றை ஒப்படைத்திருந்தால் கடன் பெற்றுக்கொண்டிருக்க வேண்டியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, நாடு கடன் சுமையில் சிக்கியுள்ளதாகவும் எந்தவொரு வருமான வழிகளும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட கடன் எல்லைகளின் அடிப்படையிலேயே புதிய அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்களின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment