எமது கட்சியின் அனுமதியுடன், ரஞ்சன் ராமநாயக்க தலைவராக நியமிக்கப்பட்டார்
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சபாபதியும் ஸ்தாபக தலைவருமான முபாறக் மஜீத் முப்தி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது கட்சியை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்..எமது கட்சிக்கும் லைக்காவுக்கும் சம்பந்தம் இல்லை. எமது கட்சியின் நிர்வாகத்தில் லைக்காவின் உரிமையாளர் அங்கத்தவராக இல்லை.
அத்துடன் முன்னாள பாராளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் எமது கட்சியின் நிர்வாக சபையின் ஏகோபித்த அனுமதியுடன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது தேர்தல் காலம் என்பதால் அவரது நியமனம் பற்றி தேர்தல் திணைக்களம் தேர்தல் முடிவுற்ற பின் அறிவிப்பார்கள்.
ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் லஞ்சம், களவு இல்லாத அரசியல்வாதி என்பதை முழு நாடும் அறியும்.
எமது கட்சியின் முதலாவது பாராளுமன்ற தேர்தலிலேயே ஒன்பது மாவட்டங்களில் பலமான வேட்பாளர்களை போட்டிருப்பதாலும் அவர்களில் பலர் வெற்றியை நோக்கி செல்வதாலும் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக எமது கட்சி பற்றி பொய்களை பரப்புகிறார்கள் என முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
Post a Comment