Header Ads



எம்முன் உள்ளது நூல் பந்தைப் போல் எல்லா பக்கங்களிலும் சிக்குண்ட தேசமாகும்.



- இஸ்மதுல் றஹுமான் - 

      எம்முன் உள்ளது நூல் பந்தைப் போல் எல்லா பக்கங்களிலும் சிக்குண்ட தேசமாகும். பொருளாதாரத் துறை, சட்டவாக்கம், சமூகம், தேசங்களுடனான தொடர்பு அனைத்தும் சிக்குண்ட நூல் பந்தைப் போன்றது என ஜனாதபதி  அநுர குமார திசாநாயக்க நீர்கொழும்பு, கட்டுவபிட்டி சாந்த செபஸ்தியன் தேவஸ்தினத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஜனிதிபதியிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

    அங்கு கேட்கப்பட்ட கேள்விகளும் ஜனாதிபதி அளித்த பதில்கள் வருமாறு


கேள்வி : இவ்வளவு காலமும் நடந்த விசாரணைகளில் பாதுகாப்புப் பிரிவினரினதும் புலனாய்வுப் பிரிவினரினதும் தொடர்புகள் வெளிவந்துள்ளன. வவுனத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை தொடக்கம் தெஹிவளையில் குண்டை வெடிக்கவைத்த பயங்கரவாதியுடன் தொடர்பிலிருந்த பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் உட்பட பலர் இன்னும் கடமையில் உள்ளனர். அவ்வாறான நிலையில் நியாயம் ஏற்படும் என நம்பமுடியுமா?


பதில்:  யாரையும் பூரணமாக சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு விசாரணை நடாத்த முடியாது. கடந்த காலத்தில் எமது நாட்டில் விசாரணைகள் இடம் பெற்றது குற்றவாளிகளை இணம்கண்டு அந்த குற்றத்தை நிரூபிக்க சாட்சியங்களை சேகரிப்பதே. அது முறையான விசாரணையின் சிறந்த பொறிமுறையல்ல. நாம்  இவர்தான் குற்றவாளி அவர்தான் பிரதிவாதி என்ற பூரண நிலைப்பிட்டிலிருந்து விசாரணைகளை நடாத்துவதில்லை. விசாரணையை முன்னெடுக்கும் போது  உண்மைகள் வெளிவரும் போது இதற்கு தொடர்புடைய பலமான சாட்சிகள் வெளிப்படும் போது அவர்களை விசாரணைகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் நீக்க ஒருபோதும் தயங்கமாட்டோம். அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு பட்டிருந்தால் விசாரணை பொறிமுறையில் இருந்து நீக்குதுடன் கடமையை உரிய முறையில் செய்யத் தவறியதற்காக ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


கேள்வி : ஜனாதிபதி அவர்களே சகலருக்கும் ஒரே சட்டம் என்று நீங்கள் அரசியல் மேடைகளில் கூறினீர்கள். களனியிலிருந்து தெற்கிற்கு குண்டு லொரியை ஓட்டிச்செல்லும் போது  அந்த லொரியை யாருடைய வேண்டுகோளுக்கு யாருடைய பலவந்தத்தினால் செல்ல அனுமதிக்கப்பட்டது என அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பதிவு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியாயம் பெற்றுத் தருவீர்கள் என்று நம்புகிறோம். நாம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நிகழ்வை நினைக்கும் போது மயிர் சிலிர்கின்றன. மக்கள் ஒரு விதமான வேதனையில் உள்ளனர். எவ்வளவு பணம் வழங்கினாலும் நிவாரணங்களை கொடுத்தாலும் தாய்க்கு பிள்ளை இல்லை. 6 மாத குழந்தையில் இருந்து 32 பிள்ளைகள் உயிரிழந்தார்கள். சகலருக்கு ஒரே சட்டம் தேவை. இவர்களுக்கு மருந்து வாங்க நியாயமான விலை வேண்டும்.


பதில் : எமக்கும் சந்தேகத்துக்குறிய பல காரணங்கள் உள்ளன.  அதனை பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக பேசுவதை விடுத்து முறையான விசாரணைகள் மூலம் அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதே போல்  முறையான சட்ட நடவடிக்கைக்குச் செல்வதாக இருந்தால் ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அந்த வழக்கை முன்வைத்தால் பாதிப்பு ஏற்படும். சில கருத்துக்களை மக்கள் முன்வைப்பது தகுதியில்லை. நீங்கள் கூறியது போன்று நான் பல தடவைகள் சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். அந்த சந்தேகங்கள் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்து நிவர்த்திசெய்ய மீண்டும் விசாரணைக்கு உற்படுத்தியுள்ளோம்.

  அடுத்து உண்மையில் எமக்கு ஆட்சி கிடைத்திருப்பது  சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டிற்கு உட்பட்ட அரசாங்கமாகும். ஐ.எம்.எப். வேலைத்திட்டம் இன்னும் மூன்று வருடங்களுக்கு உள்ளன. எமது ஐந்து வருட ஆட்சில் மூன்று வருடங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக்கொண்ட வேலை திட்டங்களுடனாகும்.  அவர்கள் மூலம் எமது நாட்டில் ஏற்படுத்த வேண்டிய பல அளவுகோள்களை கொடுத்துள்ளார்கள்.  அவற்றை சம்பூரணப் படுத்திக்கொள்வது அத்தியவசியமாகும். கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது

அந்த அளவுகோள்களுக்குள் இருந்துகொண்டு மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்கும் யோசணைகளை ஏற்படுத்திக் கொள்வவற்காக கலந்து உரையாடல்கள் அதிகார மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பக்கேஜை ஏற்படுத்த எதிர்பார்கிறோம்.


 கேள்வி :  எனது 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனது மூத்தமகன்,அவரின் இரு பிள்ளைகள்,  ஒரே மகள், அவரின் மூன்று பிள்ளைகள். நான் தனிமையில் வாழ்கிறேன். உயிரிழந்து உயிரிழந்து வாழ்கிறோம். இதற்கு நியாயம் வேண்டும்.


கேள்வி : நான் வத்தளை டொயாட்டா கம்பனியில் வேலை செய்கிறேன். எனது இடுப்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. தொழில் நிமித்தம் நிவுஸ்லாந்திற்கு செல்ல ஆயத்தமாக இருந்த போதே இச்சம்பவம் நடந்தது. எனது வாழ்வே இல்லாமல் போய்விட்டது. 3 பிள்ளைகள் உண்டு. எப்படியாவது வாழ்க்கையை கொண்டு சொல்வேன். நான் எந்தக் கடசியையும் சேராதவன். இந்தப் பிள்ளைகளுக்காக நாட்டை நிர்மாணித்துத் தருவீர்கள் என நினைக்கிறேன்.


கேள்வி : எனது கேள்வி முனைய சகோதரர் கேட்டது போல் சந்தேகிக்கப்படக் கூடியவர்கள் இருக்கும் போது எப்படி விசாரணையை முன்னெடுத்துச் செல்வது?. சாணி அபேசேக்கர, ரவி செனவிரத்ன ஆகியோர் கூறினார்கள் புலனாய்வுத்

 துறையினர் அவர்களை தவறாக வழி நடித்தினார்கள்

என்று. அப்படியானால் அவை இன்றும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதம் என்ன?.


பதில் :  பல்வேறு ஊடகங்களினூடாக வெளிவந்ததை உள்ளன. அறிக்கைகளில் உள்ளடங்கியவைகள் இருக்கின்றன. ஒவ்வொருவர் ஒவ்வொரு சந்தர்பங்களில்  முன்வைத்த கருத்துக்கள் உள்ளன. பத்திரிகைகளில் எழுதியதை வைத்து தீர்மானிப்பதா? அல்லது யூ டியுபில் கூறியதை வைத்து முடிவுசெய்வதா? புத்தகத்தில் உள்ளதை வைத்து தீர்மானம் எடுப்பதா? என்று நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். தற்போது நாட்டிலுள்ள முறையான விசாரணை பொறிமுறையில் பிரச்சிணைக்குறிய இடங்களில் தெளிவை பெற்றுக்கொண்டு  அந்த பொறிமுறை நடக்கும் போது  அந்த அதிகாரிகளுக்கு சம்பந்தம் இருப்பது வெளிவருமாக இருந்தால் எந்த வேறுபான்றி அவர்களை ஓரம்கட்டி வைக்க தயங்கமாட்டோம்.

   நாம் செய்ய வெண்டியது

 ஆரம்பத்திலேயே அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து அதனூடாக யாராவது அடையாளம் காணமுடியுமாக இருந்தால் அவர்களை விசாரணை நடவடிக்கைகளிலிருந்து ஒரு பக்கமாக வைப்போம். நாம் சொல்வது இருக்கும் எல்லோரையும் ஒரு பக்கம் வைப்பதல்ல. அது நியாயமில்லை. விசாரணையில் மற்ற சாராருக்கும் நியாயம் விளங்க வேண்டும். ஒரு சாராருக்கு மாத்திரம் நியாயம் தென்படுவதில் நீதியை நிலைநாட்ட முடியாது. மற்றய சாராருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனால் சந்தேகம் கொள்ளவேண்டாம். நாம் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.


   மற்றது தாய் கூறியது உண்மை. நாமும் எமது வாழ்வில் அனுபவித்துள்ளோம். எமது நெருக்கமானவர்கள் எந்தக் காரணமுமின்றி உயிரிழந்த வேதனையை அனுபவித்தவர்கள். தனிப்பட்ட முறையில் என்னை எடுத்துக்கொண்டாலும் காரணமின்றி ஏதோஒரு குழுவினரால் எனது நெருக்கமானவர்களும் படுகொலை செய்யப்பட்டதை வாழ்க்கையில் அனுபவித்து உளளோம். உங்களைப் போல் எனக்கும் அந்த இருள்சூழந்த சோதனை ஏற்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டுவது எமக்கு கைவிட முடியாத பொறுப்பு என்பதை உணர்கிறோம்.

 எம்முன் உள்ளது நூல் பந்தைப் போல் எல்லா பக்கங்களிலும் சிக்குண்ட தேசமாகும். பொருளாதாரத்தை துறை, சட்டவாக்கம், சமூகம், தேசங்களுடனான தொடர்பு அனைத்தும் சிக்குண்ட நூல் பந்தைப் போன்றது. பதட்டமடையாமல், அவசரப்படாமல் முறையாக இந்த நூல் பந்தை பிரிப்பதன் மூலம்  அழகான, மகிழ்ச்சியாக வாழக்கூடிய, அபிவிருத்தியடைந்த, முன்னேற்றகரமான தேசமாக மாற்றமுடியும். அதனை நிலைநாட்டுவதற்காக அதிக பட்ச முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.


 கேள்வி : நான் இந்த நாட்டின் அரசியல்வாதிகளை நம்புவதில்லை.  ஆனாலும் இம்முறை உங்களுக்கு வாக்களித்தேன். அன்று இந்த தாக்குதல் நடப்பதை நீங்களும் அறிந்திருக்க வேண்டும். அறியாமல் இருந்தது அன்று தேவஸ்தானத்திற்கு வந்த நாங்கள் மாத்திரமே. அன்று இந்த தாக்குதலை தடுக்க எவ்வளவோ சந்தர்பங்கள் இருந்தன.ஆனால் இன்று நாம் வீதியில் வரும் போது மிருகங்களைப் போல் பரிசோதித்தார்கள்.  இங்கு வருபவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிகின்றன. எமக்கு நியாயத்தை பெற்றுத்தர உங்களால் முடியுமா?. எனது பிள்ளைகளை தாய் தந்தையை தர முடியுமா?. முடியாது. இது கடினமானது. நீங்களும் அரசியல் காட்சிகள் ( ஷோ) இல்லாமல் செய்து காட்டுங்கள். சட்டம் என்பது அரசியலுக்கு அடிமைப்பட்டுள்ளது. சுயாதீனமான பொறிமுறையை ஏற்படுத்துங்கள்.


பதில் :  முதலாவது உங்கள் கருத்து பிழையானது. பிரமுகர் பாதுகாப்புப் பிரிவிற்கு இது அறியக்கிடைத்திருந்தது. பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் சேவையைப் பெற்றுக் கொள்ளபவர்களுக்கு இதனை தெரியப்படுத்தினார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா?  நானோ எனது கட்சியின் எவருமோ பிரமுகர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பாதுகாப்பு சேவைக்கு எடுத்துக் கொண்டதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 

    யாருக்கும் தெரியும் உயிர் ஒன்று இழக்கப்பட்டால் அதற்குப் பதிலாக உயிர் ஒன்றை கொடுக்க முடியாது. இது யதார்தம். கவலைக்குறிய விடயத்தை நடாத்துவதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு விசாரணை மூலம் தண்டனை பெற்றுக்கொடுப்பதே நியாயம். மீண்டும் அவ்வாறான கொடூரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு

 வழிவகுப்பதே நீதி.


  இந்த முறைமை உடைந்து விழுந்துள்ளது  அரசியலினால் தான் என்றால  அதனை அரசியலினால்தான் மறுசீரமைக்கப்பட வேண்டும்.  யாருக்கு சொல்லமுடியும் நான் அரசியலை அங்கீகரிப்பதில்லை. அரசியல்வாதிகளை சந்திக்க மாட்டேன். வாக்களிக்கச் செல்லமாட்டேன். சுயாதீனமாக வாழ்கிறேன் என்று. இதனால் முறைமை மாற்றமடையுமா?. மாற்றமடையாது. சகல துறைகளிலும் முறைமை உடைந்துவிழ ஆரம்ப இடம் அரசியல் என்றால் அவற்றை அரசியலாலேயே

 மாற்றக் கூடியதாக இருக்கும்.  அரசியல் வாதிகளை சந்திக்காமல் இருப்பது வீரச் செயல் என்று கருதினால் உடைந்து விழுந்த முறைமையை  பாதுகாப்பாக மாற்றக் கூடியதும் அரசியலே.

  நாம் உண்மைக்காக எழுந்து நிற்பவர்கள். எம்மை நம்பாதவர்கள் சந்தேகிப்பவர்களை எமது செயல்முறையின் உபயோகத்தின் மூலம்  மாற்றமடையச் செய்வோம்.



No comments

Powered by Blogger.