இப்படியெல்லாம் நமது சமூகத்தில் கேட்கின்றனர்
நமது சமூகத்தில்:
ஏன் விவாகரத்தான பெண்ணை திருமணம் முடிக்கிறாய்? அவள் ஏற்கனவே வாழ்ந்து முடித்தவள் அல்லவா! ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்யலாமே! என்று கேள்வி கேட்கின்றனர்.
நம் சமூகத்தில்:
ஏன் நீ விதவைப் பெண்ணை மணம் முடிக்கிறாய்? அவள் ஏற்ககனவே வாழ்ந்து முடித்து, பல துக்கங்களையும் துயரங்களும் சுமத்து கொண்டு வருபவள் அல்லாவா! என்று கேள்வி கேட்கின்றனர்.
நம் சமூகத்தில்;
ஏன் கற்பழிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்கிறாய்? அவள் ஏற்கனவே மானம் பறிபோய், கற்பிழந்தவள் அல்லவா! என்று கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் நம் சமூகத்தில்:
ஒரு கயவனை, ஒரு கள்வனை, ஒரு குடிகாரனை, ஒரு குடுகாரனை திருமணம் செய்து வைக்கப்படுவது சர்வசாதாரணம்.
சமூகத்தின் பார்வையில் ஆண்கள் எல்லோரும் நாகரீகமானவர்கள்.
அதுபோக ((ஆண் பிள்ளை என்றால் குறைகள் பார்க்கக்கூடாது. போகப் போக சரிப்பட்டு வரும்.)) என்று ஒரு பஞ்சமாபாதக கதையையும் கட்டி வைத்துவிட்டனர்
Imran Farook
Post a Comment