ராஜபக்ஸ சகோதரர்கள் போட்டியிடாத தேர்தல்...
பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்து தீவிர அரசியலில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ராஜபக்ச சகோதரர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது விசேட அம்சமாகும்.
நாமல் ராஜபக்ஷ தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.
Post a Comment