நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா..?
நீங்களும் உங்கள் பாடும் என்று வாழப் பழகுங்கள்! மனிதர்களிடம் எதுவும் எதிர்பார்க்காமல், எதையும் வேண்டாமல் இருக்கப் பழகுங்கள். கொடுப்பதில்தான் கெளரவம் இருக்கிறது, கேட்பதால் தாழ்வும், இழிவுமே வந்து சேரும்.
உங்கள் சூழ்நிலைகள், எதுவாக இருந்தாலும் சுயமரியாதையை கைவிடாதீர்கள், போதுமென்ற மனமே பெரும் செல்வமாகும்.
இந்த உலகம் யாருக்கும் சுவனமாக ஆகப் போவதுமில்லை, யாருக்கும் நரகமாக ஆகப் போவதுமில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அறிஞர் இப்னு தைமியா அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்:
மனிதர்களிடம் நீங்கள் தேவை காணும் அளவுக்கு - அது ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் சரி, அவர்களிடம் உங்கள் மதிப்பும் மரியாதையும் குறைந்து விடும்.!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment