Header Ads



இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்த, திருட்டு வாகனங்கள் அம்பலம்.


அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.


காலியில்  இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “இந்த தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள்.


புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது அம்பலமாகி உள்ளது.


சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு விழுந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் ஓட்டப்பட்டமை அம்பலமாகி உள்ளது.


அதைப்போலவே கோடிக்கணக்கான வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டுவந்து முற்றத்தில் வைத்துவிட்டுச்செல்வது இடம்பெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.