Header Ads



சிறந்த ஆய்வாளராக தெரிவான இலங்கையர் அஜ்மல் அஸீஸ்


செவிப்புலனற்றோருக்கான கேட்கும் திறனை வழங்கும்  Cochlear Implant இல் நவீன தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்து, Victorian International Education Awards 2024இல் சிறந்த ஆய்வாளராக தெரிவான இலங்கையை சேர்ந்த பொறியியலாளர் Ajmal Azees  க்கு வாழ்த்துக்கள்.


உலகில் 700 millionக்கும் அதிகமான மக்கள் செவிப்புலனற்று உள்ளனர்.


அவர்களுக்கு செவிப்புனை வழங்க Cochlear Implant எனும் இலத்திரனியல் கருவி சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு பலருக்கு கேட்கும் ஆற்றல் கிடைக்கப் பெறுகிறது.


இவ்விலத்திரனியல் கருவி மின்சாரத்தின் மூலமே இயக்கப்படுகிறது. Azeez அவர்களின் கண்டுபிடிப்பு Light மற்றும் வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி Cochlear Implantஐ இயக்கி அதன் மூலம் கேட்டல் நரம்பை (Auditory Nerve) தூண்டி கேட்கும் திறனை வழங்குகிறது.


1978இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Cochlear Implant இதுவரை எந்த மாற்றத்துக்கும் உட்படவில்லை.


இந்த ஆய்வின் மூலம் Ajmal Azeez உலகின் முதலாவது "Hybrid Cochlear Implant"ஐ அறிமுகம் செய்தவர் என்ற பெருமைக்கு உள்ளாகிறார்.


இவரது கண்டுபிடிப்பு அவுஸ்திரேலியாவின் St Vincent's Hospitalஇல் சோதனைக்கு (Pre Clinical Trialக்கு) உட்படுத்தப்பட்டு வருகிறது.


குருநாகலையை பிறப்பிடமாகக் கொண்ட Ajmal Azeez இலங்கை Ruhuna பல்கலைக்கழகத்தில் Electrical & Information Engineering பட்டதாரியாவார்.

தனது PhD கற்கைகளுக்காக அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்தின் Bionics Instituteஇல் ஆய்வாளராக இணைத்து கொண்டிருந்தபோதே மேற்படி கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.


இதுபற்றி பல்கலைக்கழக Deputy Vice-Chancellor, Saskia Loer Hansen கருத்து தெரிவிக்கையில் இந்த விருதுகள் மாணவர்களுக்கு பெரும் அங்கீகாரத்தை வழங்குவதாகவும், சமூகத்திற்கு அவர்கள் செய்யும் மதிப்புமிக்க பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.


"RMITயில் கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக சர்வதேச மாணவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பயணம் செய்கிறார்கள்,"


"எங்கள் சர்வதேச மாணவர்கள், சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர் மற்றும் வகுப்பறை, வளாக வாழ்க்கை மற்றும் பட்டப்படிப்புக்கு அப்பால் இருக்கும் உறவுகள் மூலம் திறன்கள் மற்றும் உலகளாவிய அறிவை கொண்டு வருகிறார்கள்."

என தெரிவித்தார்.


இதுபற்றி Ajmal Azeez தெரிவிகாகையில்


உண்மையிலேயே இந்த அங்கீகாரம் என் கண்களில் ஆனந்தக்ஸ கண்ணீரை வரவழைக்கிறது.


"இதுவரை, நான் எனது PhDயில் மூன்றரை வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எனது கல்வி மூலம் கிடைத்த அங்கீகாரம் சமூகத்துக்கு ஏதாவது சாதித்துள்ளேன் என மனநிறைவடையச் செய்கிறது எனத் தெரிவித்தார்.


Source: RMIT Official

தமிழில்: Ziyad Aia

No comments

Powered by Blogger.